சிவசேனா சின்னம் , பெயர் ஒதுக்கீடுக்கு எதிரான உத்தவ் தாக்கரே கோஷ்டி மனு- உச்சநீதிமன்றம் நாளை விசாரணை!
டெல்லி: சிவசேனா கட்சியின் சின்னம் மற்றும் பெயர் ஆகியவற்றை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டிக்கு ஒதுக்கீடு செய்ததற்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்த உள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்று வந்தது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள், திடீரென முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அத்துடன் பாஜக ஆட்சி அமைக்கவும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த சிவசேனா கட்சி பெயர், சின்னம் அத்தனைக்கும் ஏக்நாத் ஷிண்டே உரிமை கோரியது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. இதன்பின்னர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா கட்சி பெயர், சின்னம் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது உத்தவ் தாக்கரே கோஷ்டிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
ஏற்கனவே மகாராஷ்டிராவில் முந்தைய உத்தவ் தாகக்ரே அரசானது, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாகரிடம் பரிந்துரைத்திருந்தது. இப்பரிந்துரையை 90 நாட்களுக்குள் பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவடைய இருக்கிறது. அப்படி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தால் முதவ்லர் பதவியை ஷிண்டே பறி கொடுக்கும் நிலைமை ஏற்படும். இந்நிலையில் சிவசேனா கட்சி, சின்னம் பெயர் தொடர்பான உத்தவ் தாக்கரே மனு மீது நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications