"உடனடியாக தீர்ப்பாயம் அமைக்கணும்!" தமிழகம் vs கர்நாடகா.. தென் பெண்ணை நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: தமிழ்நாடு கர்நாடகா இடையேயான தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இப்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. இரு மாநிலங்களுக்கும் இடையே இந்த விவகாரத்தில் நீண்ட காலமாகப் பிரச்சினை இருந்த நிலையில், இதில் நதி நீர் பிரச்சினை தீர்க்கத் தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், என்.வி. அஞ்சாரியா அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு கர்நாடகா இடையே நதி நீர் பங்கீடு தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் ஒன்று தான் தென்பெண்ணை நதி நீர் பங்கீடு தொடர்பானது. காவிரி விவகாரம் குறித்து பலருக்கும் தெரிந்து இருக்கும். ஆனால் தென்பெண்ணை விவகாரம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இந்த தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இப்போது தீர்ப்பளித்துள்ளது.. தமிழ்நாடு, கர்நாடகா இடையேயான தென் பெண்ணை தொடர்பான மூல வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.. நீதிபதிகள் விக்ரம் நாத், என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில், விசாரணை நிறைவடைந்ததால் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
அதில் நதி நீர் பிரச்சினை தீர்க்கத் தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் தீர்ப்பாயத்தை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பாயம் அமைக்கப்பட்டவுடன் அது குறித்து அரசிதழில் வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
தீர்ப்பாயம் அமைக்க உத்தரவு
தென்பெண்ணையாறு பங்கீடு தொடர்பான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையிலான சர்ச்சைக்குத் தீர்வு காண ஒரு தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, ஒரு மாதத்திற்குள் இரு மாநிலங்களுக்கு இடையேயான நீர் பிரச்சினை குறித்து தீர்ப்பாயத்தை அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. தீர்ப்பாயம் அமைக்கப்பட்டவுடன், தமிழ்நாடு தாக்கல் செய்த புகாரை அங்கு முன் வைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னணி
கர்நாடக மாநிலம், சிக்கபள்ளாபூர் மாவட்டம், நந்தி மலையில் உருவாகும் இந்த ஆறு, கர்நாடகாவில் தொடங்கி தமிழ்நாட்டில் (கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக) பாய்கிறது. இந்த தென் பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியில் கர்நாடகா தடுப்பணை கட்டிய நிலையில், அதை எதிர்த்தே இந்த வழக்கு தொடரப்பட்டது.
தமிழக அரசு வாதம்
2018ஆம் ஆண்டில், தென்பெண்ணை நதியில் கர்நாடகா அரசு அணை அமைத்ததற்கு எதிராகத் தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கர்நாடகா அகசின் செயல் நீரைத் தமிழ்நாட்டு மக்களின் நலனைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் இதுபோல அணை கட்ட கர்நாடக அரசுக்கு எந்த வித உரிமையும் இல்லை என்று தமிழ்நாடு நீதிமன்றத்தில் வாதிட்டது.
மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் என்பது தேசியச் சொத்து என்றும் எந்த ஒரு மாநிலமும் தண்ணீரின் மீது தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியாது என்றும் தமிழ்நாடு வாதிட்டது. தென்பெண்ணை ஆறு குறித்து 1892ல் இரு மாநிலங்களுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் சட்டப்பூர்வமானது என்றும் அது அமலில் இருப்பதால் கிளை நதிகளிலும் அணை கட்ட முடியாது எனத் தமிழக அரசு வாதிட்டது. தமிழக அரசின் வாதத்தை ஏற்றே தீர்ப்பாயம் அமைக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
"மாதம் ரூ.90,000.." வாயை பிளக்க வைக்கும் பானி பூரி வியாபாரியின் வருவாய்.. விவாதமான வீடியோ -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
"ஐ லவ் யூ.." அத்துமீறிய பேராசிரியருக்கு செருப்படி.. கர்நாடகாவில் தக்க பாடம் புகட்டிய கல்லூரி மாணவி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!











Click it and Unblock the Notifications