காஷ்மீர் வழக்கில் தீர்ப்பு வருத்தம் தருகிறது.. ஆனால் ஏற்றுக்கொண்டுதான் ஆகனும்.. குலாம் நபி ஆசாத்
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வருத்தம் அளிப்பதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019- ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது. இதேபோல், சட்டப்பிரிவு 35-ஏ வும் ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது, ஜம்மு காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் பிரித்தது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருந்தது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது. நாடே உற்று நோக்கிய இந்த வழக்கில், ஜம்மு காஷ்மீருக்கு "இறையாண்மை" என்பது கிடையாது. ஜம்மு காஷ்மீர் 370-வது பிரிவு என்பது தற்காலிகமானது, அப்போதைய போர் சூழ்நிலைக்காக உருவாக்கப்பட்டதுதான்.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே ஜம்மு காஷ்மீர் மகாராஜாவுடனான ஒப்பந்தத்தின் போது இந்தியாவின் அரசியல் சாசனம் இறுதியானது என ஒப்புக் கொண்டார் இந்தியாவுடன் இணைந்த போதே ஜம்மு காஷ்மீர் இறையாண்மையை இந்தியாவிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டது. எனவே, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வருத்தம் அளிப்பதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறியதாவது;- "உச்ச நீதிமன்றம் தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது. நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. ஆனால் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications