ஜம்மு காஷ்மீர் விவகாரம்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது: பிரதமர் மோடி வரவேற்பு
டெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. நாடாளுமன்றம் எடுத்த முடிவு அரசியலமைப்பு ரீதியாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும் என்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 2019- ஆம் ஆண்டு ரத்து செய்தது. அதேபோல், சட்டப்பிரிவு 35-ஏ வும் ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் பிரித்தது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருந்தது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது. நாடே உற்று நோக்கிய இந்த வழக்கில், ஜம்மு காஷ்மீருக்கு "இறையாண்மை" என்பது கிடையாது. ஜம்மு காஷ்மீர் 370-வது பிரிவு என்பது தற்காலிகமானது; அப்போதைய போர் சூழ்நிலைக்காக உருவாக்கப்பட்டதுதான்.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே ஜம்மு காஷ்மீர் மகாராஜாவுடனான ஒப்பந்தத்தின் போது இந்தியாவின் அரசியல் சாசனம் இறுதியானது என ஒப்புக் கொண்டார் இந்தியாவுடன் இணைந்த போதே ஜம்மு காஷ்மீர் இறையாண்மையை இந்தியாவிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டது. எனவே, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பிரதமர் மோடி வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: - உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. நாடாளுமன்றம் எடுத்த முடிவு அரசியலமைப்பு ரீதியாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஜம்மு காஷ்மீரில் உள்ள நமது சகோதர சகோதரிகளின் நம்பிக்கை, வளர்ச்சிக்கான பெரும் அறிவிப்பு.
எல்லாவற்றிற்கும் மேலாக உச்ச நீதிமன்றம் நமது ஒற்றுமையின் சாராம்சத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்க் மக்களின் கனவுகளை நிறைவேற்றும் எங்களின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாக இருக்கிறது என்பதை நான் உறுதியளிக்கிறேன். வளர்ச்சியின் பலன்கள் உங்களை சென்றடைவது மட்டும் இன்றி, சட்டப்பிரிவு 370 காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் பலன்கள் கிடைக்கும்" என்றார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications