Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“நீங்க செத்தாலும் கவலையில்லை..”ஸ்பைஸ்ஜெட் தலைவரிடம் கடுகடுத்த உச்சநீதிமன்றம் - பாஜக ஆதரவாளராச்சே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஸ்விஸ் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பெரிய அளவிலான தொகையை செலுத்தாவிட்டால் திகார் சிறைக்கு செல்ல நேரிடும் என ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் தலைவருக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்தியாவில் மலிவு விலை விமான சேவையை வழங்க வேண்டும் என தொடங்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது. அந்த வகையில்தான் தற்போது ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனத்தின் மூலம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு பெரிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

Supreme court warn Spice jet chairman Ajay singh on Swiss company due case

ஸ்விட்சர்லாந்தின் எஸ்.ஆர். டெக்னிக்ஸ் நிறுவனத்திடம் விமான இன்ஜின்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் ஒப்பனைக்கான சேவைகளைப் பெற்று வந்தது. இதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஸ்பைஸ்ஜெட் மற்றும் எஸ்.ஆர்.டெக்னிஸ் இடையே 10 ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் பணம் செலுத்துவது தொடர்பான அனைத்து விதிகளும் இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

எஸ்.ஆர்.டெக்னிஸ் நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திடம் இருந்து பணம் பெறுவதற்கான உரிமத்தை கிரெடிட் சுவிஸ் நிறுவனத்திற்கு வழங்கியது. இந்த நிலையில் உரிய கால அவகாசத்திற்குள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பணத்தை செலுத்தவில்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஜூலை 25 ஆம் தேதி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கிரெடிட் சுவிஸ்ஸிற்கு ஒப்புக்கொண்ட பணத்தை செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்கியது.

ஆனால், அந்த கால அவகாசத்திலும் பணத்தை செலுத்தவில்லை எனக்கூறி, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மற்றும் அதன் தலைவர் அஜய் சிங்கிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஸ்விஸ் நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி அஜய் சிங்கிற்கும் ஸ்பைஸ்ஜெட்டிற்கும் அவமதிப்பு நோட்டீஸ்களை அனுப்பிய உச்சநீதிமன்றம், கடந்த 2022 மே மாதம் போடப்பட்ட 500,000 அமெரிக்க டாலர் ஒப்புதல் விதிமுறைகளில் அடிப்படையிலேயே நீதிமன்றம் மன்னித்து விமான நிறுவனத்தை திவாலானதாக அறிவிப்பதிலிருந்து விலக்கு அளித்ததாக ஸ்விஸ் நிறுவனம் சமர்பித்த மனுவை சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை 6.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டு இருக்க வேண்டிய நிலையி, 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது என கிரெடிட் சூயிஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முன் வைத்த வாதத்தை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டு உள்ளது.

கடந்த திங்கள் கிழமை உச்சநீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஸ்பைஸ்ஜெட் தலைவர் அஜய் சிங் மற்றும் அவரது நிறுவன செயலாளர் நேரில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அஹ்சனுத்தீன் அமானுல்லா அமர்வு கடுமையான எச்சரிக்கையை அஜய் சிங்கிற்கு விடுத்தனர்.

ஸ்விஸ் நிறுவனத்திற்கு 5,00,000 டாலர் தவணையுடன் 1 மில்லியன் டாலர் தொகையை செலுத்துமாறு அவர்கள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மீறினால் திஹார் சிறையில் அடைக்கப்படுவீர்கள் உச்சநீதிமன்றம் எச்சரித்தது.

இதுகுறித்து நீதிபதிகள் தெரிவிக்கையில், "அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு நாங்கள் நகர வேண்டும். உங்கள் நிறுவனத்தை மூடினாலும் எங்களுக்கு கவலை இல்லை. அஜய் சிங் தான் ஒப்புக்கொண்டபடி நடந்து கொள்ள வேண்டும். நாங்கள் உங்கள் மரணத்தை பற்றி கூட கவலைப்படவில்லை. நீங்கள் பணம் செலுத்தவில்லை என்றால், நாங்கள் உங்களை திஹார் சிறையில் அடைப்போம்," என்று எச்சரித்து செப்டம்பர் 22 விசாரணையை ஒத்திவைத்தனர்.

ஸ்பைஸ் ஜெட் தலைவர் அஜய் சிங் பாஜகவின் தீவிர ஆதரவாளராவார். பாஜகவுக்காக பல்வேறு தேர்தல்களில் பிரச்சாரம் செய்துள்ளார். பிரபல முழக்கமான 'ஆப் கி பார் மோடி சர்கார்' என்பதை நாடு முழுவதும் புகழ்பெற வைத்தது அஜய் சிங்தான். 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு பேருதவியாக இருந்த விளம்பரங்களின் யுக்தியை உருவாக்கியதே அஜய் சிங்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+