சபரிமலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்.. உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!
சபரிமலை தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரிய மனுக்கள் மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
டெல்லி: சபரிமலை தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரிய மனுக்கள் மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.
சில வாரங்கள் முன் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வந்தது. அந்த கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியானது.

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் இரண்டு முறை தீர்ப்பிற்கு பின் கோவில் நடை திறக்கப்பட்டது.
ஆனால் ஒரு பெண் கூட கோவிலுக்குள் கடைசி வரை அனுமதிக்கப்படவில்லை. 10 முதல் 50 வயது பெண்கள் யாருமே அனுமதிக்கப்படவில்லை.
பெண்கள் நுழைவிற்கு எதிராக கோவிலை சுற்றி தொடர் போராட்டம் நடந்தது. சில சமயம் பெரிய கலவரம் கூட நடந்தது. இதனால் பெரிய அளவில் பதட்டமான சூழ்நிலை அங்கு நிலவியது.
இந்த நிலையில் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல் செய்தது. பல்வேறு அமைப்புகள் சார்பில் இதுவரை 19 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் ஆர்.எஃப் நாரிமன், டிஒய் சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த சீராய்வு மனுவை விசாரித்தது.
விசாரணையின் முடிவில் சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு வழக்கை விசாரிக்கும். அமர்வில் உள்ள மற்ற நீதிபதிகள் விவரம் பின்பு அறிவிக்கப்படும். ஜனவரி 22ம் தேதியில் இருந்து வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்.
அதே சமயம் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முன்பு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கப்படவில்லை. அதன்படி கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications