வெறும் ரூ.50 செலுத்தினால்.. ரூ.35 லட்சம் பெறலாம்.. ஆஹா, அருமையான அஞ்சலக திட்டம்..மத்திய அரசு அதிரடி
டெல்லி: குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் பார்க்கும், புது திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.. அது என்னவென்று பாருங்கள்.
பொதுமக்களின் வசதிக்காக மத்திய அரசு பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.. அதில் ஒன்றுதான் சிறு சேமிப்பு திட்டங்களாகும்.
சிறுசேமிப்புகள்: இந்த சிறுசேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானது.. ஓரளவு அதிக வட்டி அளிக்ககூடியதுமாகும்.. தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன.. அதேபோல சில வங்கிகளும் நிரந்தர வைப்புக் கணக்குகளுக்கு கணிசமான வட்டியை அளிக்கின்றன.
அரசு அங்கீகாரம் உள்ளதால் சேமிப்பும் பாதுகாப்பானவை.. அதுமட்டுமல்ல, இதில் வட்டி குறைந்துவிடுமோ? அல்லது முதலீடு முழுவதுமாக போய்விடுமோ? என்றெல்லாம் பயம் தேவையில்லை.. காரணம், சில சேமிப்புத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் வட்டித் தொகை வழக்கமான வட்டியை விட அதிகமாகவே இருக்கின்றன.. சிலவற்றுக்கு வரிச்சலுகையும் இருக்கின்றன.. வட்டியும் உரிய நேரத்தில் கிடைத்துவிடுகின்றன. இந்த சிறு சேமிப்பு திட்டங்களில், எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

ஆர்வம்: அதனால்தான், மற்ற திட்டங்களை காட்டிலும், சிறு சேமிப்பு திட்டங்கள் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடன் வசதியை வழங்குவதால் பெரும்பாலான மக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்... இதில் பிரதானமாக திகழ்வது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்தான்.. இதில் முதலீடு செய்யவே பெரும்பாலான பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதற்கு காரணம், வங்கி கணக்குகளை காட்டிலும், தபால் அஞ்சல் நிலையங்களில் கூடுதல் லாபம், வட்டி கிடைக்கிறது.. அத்துடன், மிககுறைவான காலத்திலேயே அதிகமாக சம்பாதிக்கக்கூடிய ஏகப்பட்ட திட்டங்கள் இந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் உள்ளன.. இதனால், அதிகளவிலான வாடிக்கையாளர்கள், இந்த தபால் அலுவலகங்களில் சேமிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வயது முதிர்வு: இப்போதுகூட ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.. தினமும் ரூ.50 முதலீடு செய்தாலே போதுமாம், உங்கள் முதிர்வு காலத்தில் ரூ.35 லட்சம் வரை கிடைக்கும் அருமையான அஞ்சலக சேமிப்பு திட்டம் தெரிவிக்கிறது.. அந்தவகையில், குறுகிய முதலீட்டின் மூலமாக நல்ல லாபத்தை தரக்கூடிய போஸ்ட் ஆபீஸ் கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பு என்னவென்றால், இந்த திட்டத்தின் மூலமாக தினமும் ரூபாய் 50 அதாவது மாதத்திற்கு ரூபாய் 1500 ரூபாய் வரை முதலீடு செய்து வந்தாலே முதிர்வு காலத்தில் ரூபாய் 35 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 19 வயது நிரம்பிய அனைத்து இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முடியும்.
சூப்பர் திட்டம்: இந்த காப்பீட்டுத் தொகை திட்டத்தின் மூலமாக குறைந்தபட்சமாக ரூபாய் 10,000 முதல் அதிகபட்சமாக 10 லட்சம் வரைக்கும் சேமிக்க இயலும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பொழுது உங்களுக்கு தேவையான கடன் வசதியையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பு, வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், கூடுதல் நம்பிக்கையையும் தந்து வருகிறது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications