சுஷ்மா மேடம், தேர்தலில் போட்டியிடாததற்கு ரொம்ப நன்றி: கணவர் ஸ்வராஜ்
Recommended Video

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்த மத்திய அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜுக்கு அவரின் கணவர் நன்றி தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பம் இல்லாததை அவர் பாஜக மேலிடத்திடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் முடிவை அவரின் கணவரும், முன்னாள் ஆளுநருமான ஸ்வராஜ் கவ்ஷல் வரவேற்றுள்ளார்.
இது குறித்து ஸ்வராஜ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மேடம்- இனி தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்ற முடிவுக்கு மிகவும் நன்றி. மில்கா சிங் கூட ஒரு கட்டத்தில் ஓடுவதை நிறுத்திவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விதிஷா தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சுஷ்மா ஸ்வராஜ் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications