இரவு முழுக்க போராட்டம்.. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா! நடந்தது என்ன?
டெல்லி: விலைவாசி, ஜிஎஸ்டி அதிகரிப்பு, வேலையின்மை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பதாகைகளை ஏந்தி கேள்வியெழுப்பியதற்காக காங்கிரஸ், திரினாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒரு வாரக்காலம் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் 50 மணி நேர தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நேற்று தொடரப்பட்ட போராட்டம் இரவு முழுவதும் நடந்துள்ளது.
Recommended Video
விலைவாசி, ஜிஎஸ்டி அதிகரிப்பு, வேலையின்மை, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளின் மேல் பயன்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் மீது காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் மக்களவையில் பதாகைகளை ஏந்தி தொடர் முழக்கங்களை எழுப்பினர். நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் பதாகைகளை ஏந்தி முழக்கமிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்க்கட்சியினரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இதில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட நான்கு எம்.பிக்களை மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். இது எதிர்க்கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மக்களவை சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மாநிலங்களவையின் மாண்பினை குறைக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் நடந்துகொண்டதாக திமுக, காங்கிரஸ், திரினாமுல் காங்கிரஸ், இடதுசாரி என சுமார் 19 எம்.பிக்கள் இந்த வாரம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நேற்று தொடர்ந்த போராட்டம் இரவு முழுவதும் நடந்துள்ளது. 50 மணி நேரம் இந்த தர்ணா போராட்டம் நடைபெறும் என எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு வருகை தந்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "காங்கிரஸ், திமுக, டிஎம்சி, சிபிஎம் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 50 மணி நேர தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். விலைவாசி உயர்வு மற்றும் உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறித்து அவசர விவதாம் கோரியும், தங்கள் இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்" என்று கூறினார்.
மேலும், "UPA அரசாங்கத்துடன் ஒப்பிடும்போது மோடி அரசு எம்.பிக்களின் இடைநீக்கம் சுமார் 170% வரை அதிகரித்துள்ளது." என்று கூறினார்.
அதேபோல "நாங்கள் ஜனநாயகத்தின் மீதான மோடி-ஷா தாக்குதலை எதிர்த்துப் போராடுகிறோம், மோடி ஆட்சி இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளியாகப் பார்க்கப்படும் என்பது தெளிவாகிறது" என்று இந்த மழைக்காலக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 காங்கிரஸ் எம்.பிக்களில் ஒருவரான மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
இந்த தொடர் போராட்டத்தின்போது கூடாரம் அமைக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்தபோது நாடாளுமன்ற அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சஸ்பெண்ட் ஆகாத NCP, JMM உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்களும் இந்த தர்ணாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications