விடாத எம்.பி.க்கள்.. வீறு கொண்ட கனிமொழி.. அமித்ஷாதான் டார்கெட்.. நாடாளுமன்றத்திலேயே தர்ணா
டெல்லி: லோக்சபாவில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறிய நிலையில் தமிழகத்தை சேர்ந்த 7 எம்பிக்கள் உள்பட மொத்தம் 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் தர்ணா போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று 2 பேர் நுழைந்து ஸ்பிரே அடித்தனர். அதேபோல் நாடாளுமன்றத்துக்கு வெளியேவும் பெண் உள்பட 2 பேர் ஸ்பிரே அடித்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இன்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. இதனால் சபைகளில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து லோக்சபாவில் இருந்து 14 எம்பிக்கள், ராஜ்யசபாவில் இருந்து ஒரு எம்பி என மொத்தம் 15 பேர் மீதமுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அதன்படி தமிழகத்தை சேர்ந்த கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி, சேலம் திமுக எம்பி எஸ்ஆர் பார்த்திபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்பி சு வெங்கடேசன், கோவை எம்பி பிஆர் நடராஜன், கே சுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும் கேரள மாநிலம் இடுக்கி தொகுதி எம்பி டீன் குரியகோஸ், எர்ணாகுளம் தொகுதி எம்பி ஹிபி ஈடன், ஆலத்தூர் தொகுதி எம்பி ரம்யா ஹரிதாஸ், திருச்சூர் தொகுதி எம்பி டிஎன் பிரதாபன், பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்பி விகே ஸ்ரீகண்டன், சாளக்குடி தொகுதி காங்கிரஸ் எம்பி பென்னி பென், பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் தொகுதி காங்கிரஸ் எம்பி முகமது ஜாவேத் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கட்சி வாரியாக பார்த்தால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுகவை சேர்ந்த தலா 2 எம்பிக்கள், சிபிஐ கட்சியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த விவகாரத்தில் ராஜ்யசபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓபிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். இதன்மூலம் இன்றைய தினம் மட்டும் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இருந்து மொத்தம் 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தான் சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் தர்ணா போராட்டத்தை தொடங்கி உள்ளனர். பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க கூறியதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சஸ்பெண்ட் நடவடிக்கை எதிர்த்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications