லாக்டவுனை மீறி வெளியே வந்தால், கடும் நடவடிக்கை.. மத்திய அரசு அதிரடி வார்னிங்!
டெல்லி: தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பரிந்துரை செய்திருக்கிறது. இந்த ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கி இருக்கிறது.
Recommended Video
முன்னதாக, விதிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த அறிவுரை வெளியாகியிருக்கிறது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்ட ட்வீட்டில், சிலர் இந்த வைரசை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அரசு கொடுக்க கூடிய நெறிமுறைகளை அவர்கள் முழுமையாக பின்பற்றவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

சட்ட நடவடிக்கை
அதனை தொடர்ந்து தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில், இப்படி ஒரு அறிக்கை மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தனிமை
அதேபோல குவாரன்டைன் என்று சொல்லப்படக்கூடிய தனிமைப்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய நபர்கள், தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று சொல்லி தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அனைவரும் அவர்கள் வீட்டின் உள்ளே இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அவர்கள் அந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்றும் அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

நேரடியாக கையில் எடுக்கும்
சில மாநில அரசுகள் ஊரடங்கை சரிவர செய்யாமல் இருந்தார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒருவேளை, மக்கள் வீடுகளுக்குள் இருக்காமல், அரசு உத்தரவை மீறினால், ஊரடங்கு விவகாரத்தை நேரடியாக மத்திய அரசே கையில் எடுத்து, வெளியில் வரக்கூடிய மக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஜெர்மனியில் நடவடிக்கை
ஜெர்மனி அதிபர் மார்க்கெல், அவருக்கு கொரோனா பரவியதாக எழுந்த சந்தேகத்தால், தன்னைத்தானே தனிமைப்படுத்தியுள்ளார். அங்கே, அரசு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வருவோர் மீது மிகப்பெரிய அளவுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலும் இதே மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications