Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மசோதா மீது வேகமாக முடிவு எடுங்க.. தமிழிசைக்கு எதிரான வழக்கில்.. ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆளுநர்கள் சட்ட மசோதாக்கள் மீதான முடிவுகளை முடிந்தவரை வேகமாக எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்ட விதி 200ன் படி அவர்கள் மசோதாக்கள் மீதான முடிவை வேகமாக எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளது.

பாஜக ஆளாத மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எல்லாம் ஆளுநருக்கும் - அரசுக்கும் கடும் மோதல் உள்ளது. தெலுங்கானாவில் தமிழிசை - கேசிஆர் இடையிலும், கேரளாவில் ஆரிப் கான் - பினராயி இடையிலும் என்று டெல்லி, பீகார், மேற்கு வங்கம் என்று பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் முதல்வர்களுக்கும் இடையில் மோதல் உள்ளது.

Take decision on the bill as soon as possible says Supreme Court to Telangana governor Tamilisai Soundararajan

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் சட்டசபையிலேயே மோதல் ஏற்படும் அளவிற்கு நிலைமை கைமீறி சென்று உள்ளது. இன்னொரு பக்கம் தெலுங்கானாவில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் கே சந்திரசேகர ராவ் வழக்கு போடும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது.

உச்ச நீதிமன்றம்: ஆளுநர்கள் சட்ட மசோதாக்கள் மீதான முடிவுகளை முடிந்தவரை வேகமாக எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை வழங்கி உள்ளது. தெலுங்கானா கே சந்திரசேகர ராவ் அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தமிழிசைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

10க்கும் மேற்பட்ட மசோதாக்கள் மீது ஏன் தமிழிசை சௌந்தரராஜன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்த வழக்கு கேசிஆர் அரசு மூலம் எடுக்கப்பட்டது. இதில் ஆளுநர் சார்பாக மத்திய அரசின் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆனார்.

Take decision on the bill as soon as possible says Supreme Court to Telangana governor Tamilisai Soundararajan

அவர் தனது வாதத்தில், ஆளுநரிடம் எந்த விதமான மசோதாக்களை நிலுவையில் இல்லை என்று குறிப்பிட்டார். சரியாக வழக்கு விசாரணைக்கு வரும் நாளில்தான் தமிழிசை நிலுவையில் இருந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார்.

இந்த வழக்கில்தான் ஆளுநர்கள் சட்ட மசோதாக்கள் மீதான முடிவுகளை முடிந்தவரை வேகமாக எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்ட விதி 200ன் படி அவர்கள் மசோதாக்கள் மீதான முடிவை வேகமாக எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளது.

ஆளுநர்கள் சட்ட விதி 200ஐ மறக்க கூடாது. அந்த சட்டத்தை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

சட்ட விதி 200ன் படி ஒரு ஆளுநர் மசோதா மீது முடிந்த அளவு வேகமாக முடிவு எடுக்க வேண்டும். இதை ஆளுநர்கள் மறக்க கூடாது. அதே சமயம் இந்த வழக்கில் தெலுங்கானா ஆளுநர் இந்த தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்த முடியாது.

சட்ட விதி 200ஐ நினைவில் வைத்து அவர் வேகமாக முடிவு எடுக்க வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

வாதம்: இந்த வழக்கு விசாரணையின் போது தெலுங்கானா சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர் தேவ்.. மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தேவ் வாதம்: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில்தான் இந்த பிரச்சனை. மத்திய பிரதேசம், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த பிரச்சனை இல்லை. அங்கே மசோதாக்கள் ஒரே நாளில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

துஷார் மேத்தா: அதை பற்றி நான் கமெண்ட் செய்ய முடியாது.

தேவ் வாதம்: நீங்கள் மத்திய அரசிம் வழக்கறிஞர்.. நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும் . இந்த வழக்கில்.. ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும்.

துஷார் மேத்தா: அப்படி செய்ய கூடாது.. அது தவறான கோரிக்கை ஆகிவிடும். என்னால் தெலுங்கானா வழக்கறிஞர் போல கத்தி கத்தி பேச முடியாது.

தேவ் வாதம்: நான் கத்தி பேசுகிறேனா.. நான் இதுவரை பார்த்த சொலிசிட்டர் ஜெனரல்களில் நீங்கள்தான் மிக மோசம். உங்களை பார்த்தாலே எனக்கு அலற்சியாக இருக்கிறது, என்று குறிப்பிட்டார்.

வழக்கு முடிவு என்ன? சட்ட விதி 200ன் படி ஒரு ஆளுநர் மசோதா மீது முடிந்த அளவு வேகமாக முடிவு எடுக்க வேண்டும். இதை ஆளுநர்கள் மறக்க கூடாது. அதே சமயம் இந்த வழக்கில் தெலுங்கானா ஆளுநர் இந்த தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்த முடியாது.

சட்ட விதி 200ஐ நினைவில் வைத்து அவர் வேகமாக முடிவு எடுக்க வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+