நபிகள் நாயகம் குறித்து வெறுப்பு பேச்சு! இஸ்லாத்தை அவமதிக்காதீர்! இந்தியாவுக்கு தலிபான்கள் வேண்டுகோள்
டெல்லி: இஸ்லாம் மதத்தை அவமதிக்கும்படியாக வெறுப்பு பேச்சுகளை இந்தியா அனுமதிக்கக் கூடாது என தலிபான்கள் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
பாஜகவின் செய்தித் தொடர்பாளராக பதவி வகித்து வந்தவர் நுபுர் சர்மா. இவர் அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஞானவாபி வழக்கு குறித்து விவாதத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் மோசமான கருத்துகளை நுபுர் சர்மா தெரிவித்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு எதிராக பல்வேறு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

கருத்து
இவரது கருத்தை ஆதரிக்கும்படி டெல்லி பாஜக நிர்வாகி நவீன் ஜிந்தால் நவீன் ஜிந்தால் ட்வீட் போட்ட நிலையில் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து நுபுர் சர்மாவையும் நவீன் ஜிந்தாலையும் பாஜகவிலிருந்து நீக்கி டெல்லி தலைமை உத்தரவு பிறப்பித்தது. இறைத் தூதர் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி பேசியதற்காக அரபு நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்திய பொருட்களை புறக்கணிப்போம்
மேலும் இந்திய பொருட்களை புறக்கணிப்போம் என்றும் அறிவித்துள்ளன. இந்த நிலையில் நுபுர் சர்மா கூறிய கருத்துகள் இந்தியாவின் கருத்துகள் அல்ல என்று மத்திய அரசு விளக்கியுள்ளன. அனைத்து மதங்களுக்கு மரியாதை கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம் என்றும் கூறியிருந்தது.

கத்தார்
கத்தார், குவைத், சவுதி, ஈரான், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கத்தார் சென்றுள்ள நிலையில் நுபுர் சர்மாவின் கருத்துகளுக்கு விளக்கமளிக்க இந்திய தூதருக்கு மேற்கண்ட அரபு நாடுகள் சம்மன் அனுப்பியுள்ளன.

தலிபான்கள்
சமூகவலைதளங்களிலும் பாஜகவுக்கு எதிராக கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தலிபான்களுக்கு இந்தியாவுக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறுகையில் இந்தியாவில் ஆளும் கட்சியின் நிர்வாகி ஒருவரால் நபிகள் நாயகம் குறித்து மோசமான கருத்துகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
Recommended Video

கோரிக்கை
இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் வெறுப்புணர்வை கக்கும் பேச்சுகளுக்கு அனுமதிக்க வேண்டாம். மேலும் முஸ்லீம்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட வேண்டாம் என இந்திய அரசு கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications