டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'நீட்' தேர்வில் விலக்கு கேட்டு.. அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.க்கள் இன்று சந்திப்பு.. பரபர தகவல்!

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழ்நாட்டை பொறுத்தவரை 'நீட்' தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக ஏராளமான மாணவ-மாணவிகள் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கூட நீலகிரியில் ஒரு மாணவி தற்கொலை அரங்கேறியது.

தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது முதல் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

நீட்: விலக்கு கோரி தமிழக எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் மனு-மோடி பயணத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமோ?நீட்: விலக்கு கோரி தமிழக எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் மனு-மோடி பயணத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமோ?

 நீட் தேர்வுக்கு தமிழகம் எதிர்ப்பு

நீட் தேர்வுக்கு தமிழகம் எதிர்ப்பு

ஏற்கனவே டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்தினார். இதேபோல் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினார்.மேலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்த பாதிப்புகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார் மு.க. ஸ்டாலின்.

 ஆய்வு அறிக்கை தாக்கல்

ஆய்வு அறிக்கை தாக்கல்

இதனை தொடர்ந்து இது தொடர்பாக ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு முதல்வரிடம் தங்களது ஆய்வு அறிக்கையை சமர்பித்தது. இது தொடர்பாக ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு முதல்வரிடம் தங்களது ஆய்வு அறிக்கையை சமர்பித்தது.

 நீட் தேர்வு தேவையில்லை

நீட் தேர்வு தேவையில்லை

மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வு தேவையில்லை எனவும், மாநில அரசின் 85 விழுக்காட்டு இடங்களுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தேவைப்பட்டால் மாநில அரசே நீட் தேர்வு நடத்தி கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதன் மூலம் தமிழ்நாடு மாணவர்கள் நீட் தேர்வை விரும்பவில்லை என்பது தெள்ள தெளிவாக தெரியவந்தது.

 அமித்ஷாவுடன் சந்திப்பு

அமித்ஷாவுடன் சந்திப்பு

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஏற்கனவே தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் நீட் தேர்வு நடந்தது. இந்த நிலையில் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழகத்தின்அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறைமந்திரி அமித்ஷாவை இன்று சந்தித்து பேசுகின்றனர்.

 திமுக எம்.பி டி.ஆர் பாலு தலைமை

திமுக எம்.பி டி.ஆர் பாலு தலைமை

திமுக எம்.பி டி.ஆர் பாலு தலைமையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. திமுக,அதிமுக, இடதுசாரி, விசிக உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களும் உள்துறை அமைச்சரைசந்திக்கின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக ஏராளமான மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இது தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை வைக்க உள்ளனர்.

English summary
A group of all party MPs from Tamil Nadu are meeting Union Home Minister Amit Shah today in the capital Delhi to demand an exemption from the NEET exam for Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X