டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று டெல்லி சென்றடைந்தார். அவருக்கு அங்கு அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெறவுள்ள நிதி ஆயோக் ஆளும் குழு கூட்டத்தில் அவர் கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முதல்வராகக் கடந்த மாதம் விஜய் பொறுப்பேற்றார். கடந்த மாதமே அவர் தனது முதல் டெல்லி பயணத்தை மேற்கொண்டார். டெல்லி சென்ற அவர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியிருந்தார். அந்தப் பயணம் குறுகிய பயணமாகவே இருந்தது. இந்தச் சூழலில் முதல்வராகப் பதவியேற்ற பிறகு, விஜய் இப்போது மீண்டும் இரண்டாவது முறையாக டெல்லிக்குச் சென்றுள்ளார்.

Vijay Delhi Visit Vijay TVK

டெல்லி பயணம்

இன்றைய தினம் விஜய் விமானம் மூலம் டெல்லிக்குச் சென்றடைந்தார். டெல்லியில் முதல்வர் விஜய்க்கு அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வருகை தந்த முதல்வர் விஜய்யை, மாநிலத் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

முதல் பயணம்

கடந்த மே 27ம் தேதி பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த பிறகு, அவர் டெல்லிக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். அந்தச் சந்திப்பின் போது, கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் மற்றும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை உள்ளிட்ட தமிழகம் தொடர்பான பல்வேறு முக்கியப் பிரச்சினைகளைப் பிரதமரின் கவனத்திற்கு முதல்வர் கொண்டு சென்றார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பின் போது, துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள் மற்றும் தொழில் வழித்தடங்கள் போன்ற முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்தார். இந்தச் சூழலில் தான் முதல்வர் விஜய் மீண்டும் டெல்லிக்குச் சென்றுள்ளார்.

நிதி ஆயோக்

இது தொடர்பாக மூத்த அரசியல்வாதியும் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் கூறுகையில், "நிதி ஆயோக் கூட்டத்தில் மாநிலம் தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை முதல்வர் விஜய் எழுப்புவார். தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் என்னென்ன நிவாரணம் மற்றும் நலப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், அது குறித்து மத்திய அரசு எவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் பேசுவார்" என்றார்.

காங்கிரஸ் தலைவர்கள்

ஜூன் 12ம் தேதி சென்னை திரும்பும் முதல்வர் விஜய், அதற்கு முன்பு காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் சோனியா காந்தி, கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் டெல்லிக்குச் சென்ற போது முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. இது தொடர்பாக அப்போதே விமர்சனங்கள் எழுந்த சூழலில், இந்த முறை காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அமைத்துள்ளது. கடந்த 59 ஆண்டுகளில் இல்லாத வகையில், விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+