Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் மொழி, தமிழர் பெருமை பற்றி பிரதமர் மோடி அதிகம் குறிப்பிட்ட மன் கி பாத் மனதின் குரல் நிகழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி தமது வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத்- மனதின் குரலில் தமிழ் மொழி, தமிழர் பெருமை பற்றி அதிக முறை குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியின் மூலம் நாட்டு மக்களுடன் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும், மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி நாளை 100-வது அத்தியாயத்தை நிறைவு செய்ய உள்ளது. இதுவரை ஒலிபரப்பான உரைகளில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி தொடர்பாக மிக அதிகளவில் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் வானொலி உரையில் அதிகளவில் குறிப்பிடப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

Tamil Nadu Finds Maximum Mentions in PM Modi Mann Ki Baat

தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழியின் ஆழம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க இந்த தளத்தை பிரதமர் அதிகம் பயன்படுத்தி உள்ளார். தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி தொடர்பாக தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, உலகின் பழமையான மொழி நமது நாட்டில் தோன்றியது என்பதை நினைத்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைகொள்ள வேண்டும் என்று பெருமிதத்துடன் வலியுறுத்தியுள்ளார். அழகான மொழியாகவும், உலகப் புகழ்பெற்ற மொழியாகவும் உள்ள தமிழ் மொழியைக் கற்கவில்லை என்பதற்காக வருத்தம் அடைவதாகவும் பிரதமர் தமது உரையில் தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் உரையின் பல அத்தியாயங்களில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மக்கள் செலுத்தும் சிறந்த தாக்கம் மற்றும் பங்களிப்புகள் தொடர்பாக பல்வேறு உதாரணங்களைப் பகிர்ந்துள்ளார். வேலூரில் நாக நதியை மீட்டெடுத்து சீரமைக்க 20 ஆயிரம் பெண்கள் இணைந்து செயல்பட்டது, தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் தாக்கத்தைக் குறைத்து மண்வளத்தைக் காக்க பனைமரங்கள் நடப்படுவது போன்ற கூட்டு முயற்சிகளை மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் வெளிப்படுத்தி பாராட்டு தெரிவித்தார்.

பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சீரமைக்க தாராளமாக பணம் வழங்கிய திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாயம்மாள் குறித்தும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியுள்ளார். வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் தமிழின் அடையாளச் சின்னமாகவும் விளங்கும். திருக்குறளின் உலகளாவிய புகழ் தொடர்பாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் மூலம், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழியை தொடர்ந்து ஊக்குவித்து அதன் செழுமையை வெளிப்படுத்தி வருகிறார். அத்துடன் தமிழின் ஆழத்தையும், சிறப்பையும் பாராட்டி அதை ஆராயும் ஆர்வத்தை மற்றவர்களுக்கு பிரதமர் ஏற்படுத்தி வருகிறார்.

திருவிழா கொண்டாட்டம்: பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 30ஆம் தேதி பங்கேற்கவிருக்கும் மனதின் குரல் நிகழ்வின் 100வது பகுதியைக் கேட்குமாறு பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியை ஒரு சமூகம் கேட்கும்படியாக வடிவமைத்து, ஏராளமான மக்கள் ஒன்றாக அமர்ந்து ஒரு திருவிழாவைப் போல் இதனைக் கொண்டாடலாம் என்றும் அவர் கூறினார். மனதின் குரல் நிகழ்வின் 100வது பகுதி கொண்டாட்டத்திற்குத் தகுதியானது. ஏனெனில் இது அரசுத் தலைவரால் முற்றிலும் அரசியல் சாராத ஒலிபரப்பாக உள்ளது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சென்றடையும் நலத் திட்டங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். ஒரு அரசுத் தலைவர் ஒரு மாதமும் தவறாமல், ஒரு தடங்கலும் இல்லாமல், தனது பார்வையாளர்களுடன் உரையாடுவது இதுவே முதல்முறை மற்றும் சாதனையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

100 கோடி பேர்: பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி 100 கோடி இந்தியர்களை சென்றடைந்து இருப்பதாக ஐஐஎம் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி, தமது எண்ணங்களை நாட்டு மக்களோடு பகிர்ந்துகொள்ளும் மனதில் குரல் நிகழ்ச்சி, கடந்த சில ஆண்டுகளாக அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 100-வது அத்தியாயத்தை எட்டியுள்ள நிலையில், மனதில் குரல் நிகழ்ச்சி நாட்டு மக்களை எவ்வாறு சென்றடைந்துள்ளது, இந்த நிகழ்ச்சி குறித்த நேயர்களின் கருத்து பற்றி ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில் நூறு கோடி மக்களை மனதின் குரல் நிகழ்ச்சி சென்றடைந்து இருப்பதும், ஏதாவது ஒரு அத்தியாயத்தையாவது அவர்கள் கேட்டு ரசித்து இருப்பதும் தெரிய வந்ததுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் குறித்து பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி திரு கௌரவ் திவேதி, ஐஐஎம் நிறுவனத்தின் இயக்குநர் திரு தீரஜ்.பி.சர்மா ஆகியோர் புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கினர். அப்போது பேசிய திரு சர்மா, 23 கோடி மக்கள், மனதின் குரல் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக கேட்டு ரசித்து வருவதும், எப்போதாவது கேட்டு ரசித்த 41 கோடி மக்கள் தற்போது ரசிகர்களாக மாறியிருப்பதும் தெரியவந்திருப்பதாக கூறினார். மத்திய அரசின் அணுகுமுறை மக்கள் நலனுக்கு சாதகமானதாக அமைந்திருப்பதாக 63 சதவீதத்தினரும், தேசத்தை கட்டியமைப்பதற்கான முன்முயற்சியாக இருப்பதாக 60 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி, பிரஞ்சு, சைனீஸ், இந்தோனேஷியன், திபெத்தியன் உட்பட 11 அயல்நாட்டு மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். அகில இந்திய வானொலியில் 500-க்கும் மேற்பட்ட ஒலிபரப்பு மையங்கள் வாயிலாக, இந்த மனதின் குரல் நிகழ்ச்சி தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வருவதாக தெரிவித்தார். 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி முதல் மாதந்தோறும் ஒலிபரப்பப்பட்டு வரும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது அத்தியாயம், இம்மாதம் 30-ம் தேதி காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் மற்றும் தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சி 22 இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் தவிர, 11 அயல்நாட்டு மொழிகளிலும் ஒலிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+