தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ஏறுதா? நல்ல செய்தி வருதா? மிகுந்த ஆர்வத்தில் மத்திய அரசு ஊழியர்கள்
டெல்லி: விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களை போலவே, தமிழக அரசு ஊழியர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கிறார்கள். ஏன் தெரியுமா?
வழக்கமாக, 10 வருடத்துக்கு ஒருமுறை ஊதியக்குழு மாற்றப்பட்டு வருகிறது என்பதால், 8வது ஊதிய குழு (8th Pay commission) எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தபடியே உள்ள நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின்போது, 8வது ஊதியக் குழுவை உருவாக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்திவிட்டது..
2 காரணம்: ஆனாலும், விரைவில் அகவிலைப்படி அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.. சம்பள திருத்தம் ஏற்பட வேண்டுமானால், சம்பள கமிஷனை உருவாக்க வேண்டியது அடிப்படையான விஷயமாகும்.. மேலும், கடந்த முறை 2013-ல் எம்பி தேர்தலுக்கு முன்பே, 7வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது என்பதால், இந்த முறையும் எம்பி தேர்தலுக்கு முன்பேயே 8வது ஊதியக்குழு அமைக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்..

அதேபோல, இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.. எம்பி தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதுடன், மோடி அரசின் 2வது ஆட்சியின் கடைசி பட்ஜெட் இது என்பதால், பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளன.
பட்ஜெட்: அநேகமாக, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் காரணி உயர்த்தப்படலாம் என்கிறார்கள். ஒருவேளை 3.00 அல்லது 3.68 சதவீதமாக உயர்த்தினால், ரூ.18000லிருந்து ரூ.21000 அல்லது ரூ.26000 சம்பளம் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோலவே, தமிழக அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.. தமிழக அரசு ஊழியர்களுக்கு, ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியாக கடந்த அக்டோபர் மாதத்தில் 4 சதவீதம் உயர்வு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் இப்போது, தமிழக அரசு ஊழியர்கள் 46 சதவீதத்திற்கான அகவிலைப்படி பலனை பெற்று வருகின்றனர்..
ஓய்வூதியதாரர்கள்: அந்தவகையில், 16 லட்சம் தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியத்தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..
தமிழக அரசுக்கு போதுமான நிதி இல்லாத நிலையில், அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுமா? என்கிற கேள்வியும் வட்டமடிக்கிறது. அதேசமயம், பட்ஜெட் கூட்டம், தேர்தல் என அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்க உள்ளதால், நிச்சயம் சாதகமான அறிவிப்புகள் என்று மத்திய, மாநில அரசு ஊழியர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications