தமிழக அரசுக்கும், ஸ்டெர்லைட்க்கும் 'லிங்க்' இருக்கிறது... வைகோ பகீர் குற்றச்சாட்டு
தமிழக அரசும், ஸ்டெர்லைட் நிறுவனமும் கைகோர்த்து தான் செயல்பட்டன என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: தமிழக அரசும், ஸ்டெர்லைட் நிறுவனமும் கைகோர்த்து தான் செயல்பட்டன என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.

இந்தநிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து வைகோ பேசியதாவது, ஸ்டெர்லைட் பிரச்சனை துப்பாக்கி சூடு பிரச்சனை வந்ததால் தான் தமிழக அரசு மூடியது. தமிழக அரசும், ஸ்டெர்லைட் ஆலையும் கைகோர்த்து தான் செயல்பட்டன.
ஆலையை மூட பிறப்பித்த உத்தரவு என்பது கதைகட்டு வித்தை.13 பேர் சுட்டு கொல்லப்பட்டது, தமிழக அரசின் ஜாலியன்வாலாபாக் படுகொலை.
மேலும், அடுத்த விசாரணையின் போது, தன்னை வாதம் செய்ய விடவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தை நாடுவேன் என்றார். ஆய்வு கமிட்டி பரிந்துரை தான் செய்ய வேண்டுமே தவிர முடிவெடுக்க அதிகாரம் இல்லை.
ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது என அறிக்கையில் கூற அதிகாரம் இல்லை என்றும் வைகோ கூறினார்.
இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மீண்டும் நூறுகோடி ரூபாய் தருவதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வாதிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications