ராஜ்நாத் சிங்கை சந்தித்த ஆளுநர் ஆர்என் ரவி.. டெல்லியில் முக்கிய மீட்டிங்.. பின்னணி
டெல்லி: தமிழக ஆளுநர் ஆர்என் ரவி 4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரை ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி அடிக்கடி டெல்லி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். தனிப்பட்ட பயணமாகவும், அலுவலல் சார்ந்த பயணமாகவும் இது அமைந்து இருக்கிறது.

இந்நிலையில் தான் டெல்லிக்கு 4 நாள் பயணமாக 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றார். தற்போது அவர் டெல்லியில் உள்ளார். ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் குறித்த பின்னணி பற்றி தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே தான் டெல்லி பயணத்தின் ஒரு பகுதியாக ஆளுநர் ஆர்என் ரவி இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். ராஜ்நாத் சிங்கை சந்தித்ததும் அவருக்கு ஆர்என் ரவி பூங்கொத்து கொடுத்தார். அதன்பிறகு இருவரும் சிறிது நேரம் விவாதித்தனர்.
இந்த சந்திப்பின் பின்னணி பற்றி தமிழ்நாடு ராஜ்பவனின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛தொலைநோக்குப் பார்வையும், துடிப்பும் மிக்க நமது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, பலதரப்பட்ட தேசிய பிரச்சினைகள் குறித்த அவரது கருத்துக்கள் மற்றும் அனுபவத்தை அறிந்து பலனடைந்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன்" - ஆளுநர் ரவி'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications