Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்துக்கள் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது..! தமிழக அரசு மீது எல் முருகன் சரமாரி குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்றம் விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. திருப்பரங்குன்றம் குறித்து முதலில் திமுக எம்பி டிஆர் பாலு பேசிய நிலையில், பின்னர் அதற்குப் பதிலளிக்கும் வகையில் எல் முருகன் பேசினார். திமுக அரசு மக்களின் அடிப்படை வழிபாட்டு உரிமைகளைப் பறிப்பதாக எல் முருகன் பேசினார்.

கடந்த சில நாட்களாகவே திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மலை உச்சியில் தீபத்தை ஏற்ற வேண்டும் எனச் சொல்லி நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரம் இப்போது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது.

Tamil nadu govt failed to enforce High court madurai bench order in Thiruparankundram says L Murugan

நாடாளுமன்றம்

இது தொடர்பாக லோக்சபாவில் டிஆர் பாலு முதலில் பேசினார். சில மதவாத சக்திகள் தமிழகத்தில் அமைதியைச் சீர்குலைக்கத் திட்டமிடுகிறார்கள் என்றும் வேண்டும் என்றே பிரச்சினையை ஏற்படுத்த முயல்வதாகவும் டிஆர் பாலு தெரிவித்தார். மேலும், நூற்றாண்டுகளாகத் தீபம் ஏற்றப்பட்ட இடத்தில் இருந்து வேறு இடத்தில் தீபம் ஏற்படுத்த வேண்டும் எனச் சொல்வதாகவும் குறிப்பிட்டார். மேலும், நீதிபதி குறித்தும் அவர் சில சர்ச்சை கருத்தைக் கூறிய நிலையில், அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து மத்திய இணையமைச்சர் எல் முருகன் பேசினார். திருப்பரங்குன்றத்தில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது என்ற அவர்,மக்களின் அடிப்படை உரிமையைத் தடுக்கும் அரசாக திமுக அரசு இருக்கிறது என்றும் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எல் முருகன்

இது தொடர்பாக அவர் பேசுகையில், "திருப்பரங்குன்றத்தில் மக்கள் வழிபாட்டு உரிமையைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்ட பிறகும் கூட அதைத் தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு போலீசாரும் மதிக்கவில்லை. அங்குச் சென்றவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். வழிபாட்டு உரிமையைப் பறிக்கப்பட்டுள்ளது.

சிஐஎஸ்எஃப் பாதுகாப்போடு தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரை அமர்வு உத்தரவிட்டது. ஆனால் அப்போதும் அதை அனுமதிக்கவில்லை. அங்குச் சென்றவர்களை எல்லாம் கைது செய்து அராஜகப் போக்கை திமுக அரசும் தமிழக அரசும் கடைப்பிடிக்கிறது. மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு தடுக்கிறது. மக்கள் முருகனை வழிபடுவதைத் தடுக்கிறார்கள்.

சட்ட ஒழுங்கு சீர்குலைவு

காலம் காலமாக இந்து மக்கள் அங்குச் சென்று வழிபட்டு வந்தனர். ஆனால், அதை வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக அரசு தடுக்கிறது. குறிப்பிட்ட சமூக மக்களைத் தாஜா செய்யவே இப்படிச் செயல்படுகிறார்கள். திருப்பரங்குன்றத்தில் அங்குச் சட்ட ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டது. அங்குள்ள போலீசார் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு வழிபடச் செல்வோர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அங்குச் சென்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழிபாட்டு உரிமை மறுப்பு

அங்கு யார் செல்கிறார்களோ எல்லாரும் கைது செய்யப்படுகிறார்கள். ஜனநாயகக் குரல் நசுக்கப்படுகிறது. வழிபாட்டு உரிமை ஒடுக்கப்படுகிறது. இந்த நேரத்தில் திமுக அரசியல் செய்கிறது. ஐகோர்ட் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.. நீதிமன்றம் சொல்வதையே அவர்கள் கேட்கவில்லை. அடிப்படை உரிமைகளை மறுக்கிறார்கள். இது மாநிலத்தில் விவாதிக்க வேண்டிய விஷயம். அதை விட்டுவிட்டு இங்கு திட்டமிட்டு அவையை முடக்கி வருகிறார்கள்" என்றார்.

எல் முருகன் பேச்சுக்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எல் முருகன் பேசும்போது அவருக்கு எதிராக நின்று கொண்டே திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அந்த அமளிக்கு நடுவே தான் எல் முருகன் தனது பேச்சைத் தொடர்ந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+