நடுரோட்டில் நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்.. யாருமே எதிர்பார்க்கல.. இளைஞர்களே கவனம் ப்ளீஸ்!
டெல்லி: ராஜஸ்தானில் பலோத்ரா மாவட்டத்தில், குல தெய்வ கோவிலுக்கு வழிப்பாட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த அசோக்குமார் (45) என்பவர், திடீரென சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர் தமிழ்நாட்டில் தையல் தொழில் செய்து வந்தார். தீபாவளிக்காக சொந்த ஊர் சென்ற இவர், டிச.3ம் தேதி தமிழ்நாட்டுக்கு திரும்ப டிக்கெட் போட்டிருந்தார்.
நவ.24ம் தேதி மதியம் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. அசோக் குமார் மதியம் 1 மணி அளவில் மார்க்கெட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரும் அவரது குடும்பத்தினரும் குலதெய்வம் கோயிலுக்கு வழிபாட்டுக்காக சென்று கொண்டிருந்தனர்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு
அப்போது போகும் வழியில் திடீரென அசோக் குமார் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ந்த உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவர் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். அவரது மரணத்திற்கு மாரடைப்பு காரணம் என்று மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.
மாரடைப்புக்கு காரணங்கள்
தமிழ்நாட்டில் தையல்காரராக பணியாற்றும் அசோக்குமார், தீபாவளிக்கு முன்னதாக சொந்த ஊர் சென்று இருந்தார். டிசம்பர் 3ம் தேதி தமிழ்நாட்டுக்கு வருவதற்காக அவர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இப்படி இருக்கையில் திடீரென எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. சமீபகாலமாக நடுத்தர வயதினருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படுவது, உயிரிழப்புகள் ஏற்படுவதை பரவலாக பார்க்க முடிகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் விளக்குகின்றனர்.
உயிரை கொல்லும் உணவுகள்
குறிப்பாக அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் கொழுப்பு சர்க்கரை உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. இது இதயத்தின் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் உழைப்பின்மை காரணமாக உடல் பருமன் ஏற்படுகிறது. இது சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாக மாறுகிறது. இவை இரண்டும் இறுதியில் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
மன அழுத்தம்
இது தவிர, புகைப்பிடித்தல் மாரடைப்புக்கு மிக முக்கியமான காரணமாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மது உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதும் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றும் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ஆகியவை இதயம் தொடர்பான நோய்களை அதிகரிக்கும் என்றும், வேலை தொடர்பான மன அழுத்தம், போட்டி நிறைந்த வாழ்க்கை சூழல், சமூக அழுத்தம் இவை எல்லாம் மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்களாக இருப்பதாக மருத்துவர்கள் விளக்குகின்றனர்.












Click it and Unblock the Notifications