தமிழ்நாட்டில் 2024-ல் ரூ 12,210 கோடி ஜிஎஸ்டி வரி வசூல்! 2023-ஐவிட 6% அதிகம்! மாநிலங்களின் நிலவரம்!
டெல்லி: நடப்பாண்டில் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வரி ரூ12,210 கோடி வசூலாகி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வரி வசூல் 6% அதிகமாகும்.
2024 ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) ஒட்டுமொத்த வசூல் சாதனை அளவாக ரூ.2.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனையின் அதிகரிப்பு காரணமாக, இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட, 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. திருப்பி செலுத்தியதற்கு பின்னர் நிகர ஜிஎஸ்டி வருவாய் ஏப்ரல் மாதத்தில் ரூ.1.92 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, 17. 1 சதவீதம் அதிகமாகும்.

ஏப்ரல் மாத வசூல் அம்சங்கள்:
மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) ரூ. 43,846 கோடி
மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) ரூ.53,538 கோடி
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) ரூ. 99,623 கோடி (இறக்குமதி பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 37,826 கோடி உட்பட)
செஸ் ரூ.13,260 கோடி (இறக்குமதி பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 1008 கோடி உட்பட)
ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் வசூலிக்கப்பட்ட தொகையில் மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.50,307 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.95, 138 கோடியும் வழங்கியுள்ளது.
வழக்கமான தீர்வுக்கு பின்னர் இது, மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.94,153 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.95,138 கோடியும் மொத்த வருவாயாக உள்ளது.
2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டில் 12,210 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இது 11,559 கோடி என்னும் 2023-ம் ஆண்டு வசூலை விட, 6 சதவீதம் அதிகமாகும்.
புதுச்சேரியை பொருத்தவரை இது 13 சதவீதம் அதிகரித்து, 247 கோடியாக இருந்தது.
மாநிலங்கள் வாரியாக 2024-ல் ஜிஎஸ்டி வரி வசூல்:
- ஜம்மு காஷ்மீர் ரூ.789 கோடிகோடி
- ஹிமாச்சல பிரதேசம் ரூ.1,015கோடி
- பஞ்சாப் ரூ. 2,796கோடி
- சண்டிகர் ரூ. 313கோடி
- உத்தரகாண்ட் ரூ. 2,239கோடி
- ஹரியானா ரூ. 12,168கோடி
- டெல்லி ரூ. 7,772கோடி
- ராஜஸ்தான் ரூ. 5,558கோடி
- உத்தரப்பிரதேசம்ரூ. 12,290கோடி
- பீகார்ரூ. 1,992கோடி
- சிக்கிம் ரூ. 403கோடி
- அருணாச்சல பிரதேசம் ரூ. 200கோடி
- நாகாலாந்துரூ. 86கோடி
- மணிப்பூர் ரூ. 104கோடி
- மிசோரம் ரூ. 108கோடி
- திரிபுரா ரூ. 61கோடி
- மேகாலயா ரூ. 234கோடி
- அஸ்ஸாம்ரூ. 1,895கோடி
- மேற்கு வங்காளம் ரூ. 7,293கோடி
- ஜார்கண்ட் ரூ. 3,829கோடி
- ஒடிஷா ரூ. 5,902கோடி
- சத்தீஸ்கர் ரூ. 4,001கோடி
- மத்திய பிரதேசம் ரூ. 4,728கோடி
- குஜராத் ரூ.13,301கோடி
- தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் ரூ. 447கோடி
- மகாராஷ்டிரா ரூ. 37,671கோடி
- கர்நாடகா ரூ. 15,978கோடி
- கோவா ரூ. 765கோடி
- லட்சத்தீவு ரூ. 1கோடி
- கேரளா ரூ. 3,272கோடி
- தமிழ்நாடு ரூ. 12,210கோடி
- புதுச்சேரி ரூ. 247கோடி
- அந்தமான் நிக்கோபார் தீவுகள் ரூ. 65கோடி
- தெலுங்கானா ரூ. 6,236கோடி
- ஆந்திரப் பிரதேசம் ரூ. 4,850கோடி
- லடாக் ரூ. 70 கோடி












Click it and Unblock the Notifications