சமஸ்கிருதத்தை உயர்த்தி பேசிய பாஜக வழக்கறிஞர்! தமிழக நீதிபதி கொடுத்த அதிரடி ரிப்ளை! என்னன்னு பாருங்க!
டெல்லி: சபரிமலை வழக்கில் சட்டரீதியான வாதங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, மத ஒப்பீடுகள் மற்றும் மொழி சார்ந்த மேலாதிக்கம் குறித்துப் பேசியதற்காக உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த வழக்கறிஞருக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது.
சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இதை எதிர்த்து பல்வேறு மத அமைப்புகள் மேல் முறையீடு செய்திருந்தன.

என்ன வழக்கு?
இந்த சீராய்வு மனுக்களை விசாரித்த நீதிமன்றம், இது சபரிமலை விவகாரம் மட்டுமல்லாமல், மற்ற மதங்களிலும் உள்ள சில கட்டுப்பாடுகள் குறித்தும் சில அடிப்படை கேள்விகளை எழுப்பியது. எனவே, மதம் மற்றும் சடங்குகள் தொடர்பான சட்ட ரீதியான சந்தேகங்களைத் தீர்க்க 9 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது பாஜக சார்பு வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர் தாக்கல் செய்த வாதங்கள், வழக்கின் அடிப்படைத் தன்மையிலிருந்து விலகிச் சென்றதால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவரை கடுமையாகச் சாடினர்.
வழக்கறிஞர் பேசியது என்ன?
அஸ்வினி உபாத்யாய், ஆங்கில மொழியில் 26 எழுத்துக்கள் மட்டுமே இருப்பதாகவும், சமஸ்கிருதத்தில் 52 எழுத்துக்கள் இருப்பதால் 'தர்மம்' போன்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் சரியாக விளக்க முடியாது என்றும் கூறினார். மேலும், அனைத்து மதங்களும் சமமானவை அல்ல என்று வாதிட்ட அவர், இந்து மத நூல்களைக் காட்டி, தர்மம் என்பது மதத்தை விட மேலானது எனக் கூறினார்.
கடந்த 2000 ஆண்டுகளில் பாரதம் மத மோதல்களால் 25 துண்டுகளாகப் பிரிக்கப்பட்டதாகவும், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா அறிவியல் ரீதியாக முன்னேறுமா அல்லது அண்டை நாடுகளைப் போல மாறுமா என்பதை இந்தத் தீர்ப்பு தீர்மானிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் கண்டனம்
தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதி, மகாதேவன் இந்த வாதத்தை முற்றிலுமாக புறக்கணித்தார். வழக்கறிஞர் சமஸ்கிருத எழுத்துக்களைப் பற்றிப் பேசியபோது, "தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. அந்தப் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம். எடுத்துக்கொண்ட வழக்கின் சட்ட அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள்" என்று அறிவுறுத்தினார்.
கன்னடமும் சமஸ்கிருதமும்
அதேபோல நீதிபதி நாகரத்னா, கன்னடத்திலும் 52 எழுத்துக்கள் உள்ளன என்று குறிப்பிட்டு, "நீதிமன்றத்தில் ஒரு மதம் மற்றொன்றை விட உயர்ந்தது என்ற வாதத்தைக் கொண்டு வர வேண்டாம். இங்கு அனைவரும் சமம்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இதுபோல வாதிடாதீர்கள்
நீதிபதி சுந்தரேஷ் மற்றும் நீதிபதி அமானுல்லா இது குறித்து கூறுகையில், "தயவுசெய்து இதுபோல வாதிடாதீர்கள்" என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயைக் கண்டித்தனர். வழக்கின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு பேசும்படி அறிவுறுத்தினர்.
சமஸ்கிருதம்தான் மேன்மையானது என்கிற தொணியில் பாஜக வழக்கறிஞர் வைத்த வாதங்களை நீதிபதிகள் முற்றிலுமாக புறக்கணித்து, அதற்கான காரணத்தையும் விளக்கமாக கூறியிருக்கின்றனர். இந்த வாதம் உச்சநீதிமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழும் சமஸ்கிருதமும்
இந்தியாவில் ஏராளமான மொழிகள் இருந்தாலும், தமிழ் மட்டும்தான் சமஸ்கிருதம் இல்லாமல் சுயமாக தனித்து இயங்கக்கூடிய ஒரே செம்மொழியாகும். அதாவது சமஸ்கிருதத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட பயன்படுத்தப்படும் வார்த்தைகளை விட, தமிழில் எளிதாக மிக தெளிவான சொற்களை கொண்டு அந்த விஷயத்தை புரிய வைத்துவிட முடியும்.
சமஸ்கிருதச் சொற்கள் பல நேரங்களில் ஒரு குறிப்பிட்ட மத அல்லது வேத பின்னணியைக் கொண்டிருக்கும். ஆனால் தமிழ்ச் சொற்கள் இயற்கை மற்றும் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications