Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நீருக்கு அடியில் புதைந்துள்ள பண்டை தமிழ் நகரம்!" கொற்கை அகழ்வாராய்ச்சி! தங்கம் தென்னரசு முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக தொல்லியல் துறை சார்பில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹிந்து ஆங்கில நாளிதழுக்கு தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு தொல்லியல் துறை இப்போது ஒரே நேரத்தில் பல அகழ்வாராய்ச்சிகள், பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் மறுசீரமைப்பு பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீருக்கடியே உள்ள புராதன துறைமுக நகரமான கொற்கையில் இம்மாதம் தொடக்கத்தில் முதற்கட்ட ஆய்வு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு

மேலும், நமது மண்ணில் கண்டறியப்படும் பொருட்களைச் சோதிக்க வெளிநாட்டு ஆய்வகங்களைச் சார்ந்திருப்பதைக் கைவிடும் வகையில் சென்னையில் கார்பன் டேட்டிங் லேப் அமைக்கும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாகத் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "கீழடி, மணலூர், கொந்தகை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் புதிய அகழாய்வுப் பணிகளைச் செய்துள்ளோம். விருதுநகர் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி துலுக்கர்பட்டி, தர்மபுரி பெரும்பாலை ஆகிய இடங்களில் புதிய அகழாய்வு இடங்களைத் தேர்வு செய்துள்ளோம்.

கீழடி

கீழடி

வரலாற்றில் முதல்முறையாகத் தமிழக அரசு அகழாய்வுக்கு ₹5 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. அதேபோல வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களின் மறுசீரமைப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். கீழடியைப் பொறுத்தவரை அகழாய்வுப் பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடையும். கீழடி அருங்காட்சியகத்தின் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. வரும் அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து முதலமைச்சரால் அது திறந்து வைக்கப்படும். கீழடி அருங்காட்சியகம் 36,000 சதுர அடி பரப்பளவில் ₹12 கோடி செலவில் அமைய உள்ளது.

 மத்திய தொல்லியல் துறை

மத்திய தொல்லியல் துறை

கீழடியில் கண்டறியப்படும் பொருட்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறோம். அருங்காட்சியகம் அமைந்த உடன் முழு அறிக்கை வெளியிடப்படும். நாங்கள் எழுதும் அறிக்கைகள் மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியத்திடம் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. சொல்லப்போனால் மயிலாடும்பாறை நாங்கள் வெளியிட்ட மூன்றாவது அறிக்கை. ஆனால் மத்திய தொல்லியல் துறை இதுவரை கீழடி அகழாய்வு குறித்த 3 அறிக்கைகள் இன்னும் கூட வெளியிடவில்லை.

 கொற்கை

கொற்கை

கொற்கை நமக்கு மிகவும் சுவாரஸ்யமான தளமாகும். இது ஒரு பழமையான துறைமுக நகரம். 1968 முதல் கரையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்குத் துளையிடப்பட்ட பைப் போன்ற அமைப்பைக் கண்டுபிடித்து உள்ளோம். அதைப் பண்டைக் காலத்தில் வடிகட்டப் பயன்படுத்தியிருக்கலாம். கொற்கை மற்றும் கேரளாவின் பட்டணம் ஆகிய இரு இடங்களிலும் ஆய்வு செய்ய ஆர்வமாக உள்ளோம். நீருக்கு அடியே அகழாய்வு செய்யத் தனி நிபுணத்துவம் தேவை என்பதால் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்துள்ளோம்

 பிற மாநிலங்கள்

பிற மாநிலங்கள்

ஜூன் 9ஆம் தேதி பணிகள் தொடங்க தயாராக இருந்தது இருப்பினும் மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டது. முதற்கட்ட ஆய்வுகள் இந்த மாதம் தொடங்கும், உலகின் பிற பகுதிகளுடன் நாம் கொண்டிருந்த வர்த்தக உறவுகளைப் புரிந்து கொள்ள இந்த ஆய்வு உதவும். முதல்வர் அறிவித்ததை போலப் பிற மாநிலங்களில் இருக்கும் தமிழ் கலாசாரம் குறித்து ஆய்வு செய்யவும் தயாராக உள்ளோம். இதற்குப் பிற மாநிலங்களில் இருந்து அனுமதி வாங்க முயன்று வருகிறோம். அனுமதி கிடைத்ததும் இதற்கான பணிகள் தொடங்கும்.

 சிந்து சமவெளி நாகரிகம்

சிந்து சமவெளி நாகரிகம்

தமிழ்நாட்டிற்கும் சிந்து சமவெளி நாகரிகத்தின் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். சிந்து சமவெளியின் சின்னங்களுக்கும் நமது கிராஃபிட்டிக்கும் இடையே உள்ள தொடர்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஆய்வை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளோம். இந்த ஆய்வு சிந்து நாகரிகத்திற்கும் திராவிட நாகரிகத்திற்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி ஆராயும்.

 கார்பன் டேட்டிங் லேப்

கார்பன் டேட்டிங் லேப்

சென்னையில் கார்பன் டேட்டிங் லேப் அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். அண்ணா பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனத்துடன் இணைந்து இது நிறுவப்படும். இதற்கு ஒப்புதல் அளிக்கப் பெற வேண்டும். இப்போது நாம் நமது ஊரில் கண்டுபிடிக்கும் பொருட்களை புளோரிடாவில் உள்ள பீட்டா அனலிட்டிக்கா ஆய்வகத்திற்கு அனுப்புகிறோம். நாங்கள் பல அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதால், நமக்குச் சொந்தமாக கார்பன் டேட்டிங் ஆய்வகம் வேண்டும் என்பது எங்கள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது" என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+