செம! டாடா குழுமத்தின் மதிப்பு பாகிஸ்தான் பொருளாதாரத்தை விட பெருசு! சாதித்து காட்டிய ரத்தன் டாடா
டெல்லி: இப்போது டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு என்பது பாகிஸ்தானின் பொருளாதாரத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு பெருநிறுவனங்கள் வெற்றிகரமாக தங்கள் கம்பெனிக்களை நடத்தி வருகிறது. ஜனநாயக சூழல், நிலையான அரசு உள்ளிட்ட பல காரணங்களால் வெளிநாட்டு முதலீடுகளும் அதிகரித்தே வருகிறது.

அப்படி நமது நாட்டில் இருக்கும் மிக முக்கிய தொழில் குழுமங்களில் ஒன்று டாடா. எப்போதும் நமது நாட்டில் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் டாடா நிறுவனத்திற்குத் தனி மதிப்பும் நம்பகத்தன்மையும் இருக்கிறது.
ரத்தன் டாடா: இப்போது ரத்தன் டாடா தலைமையில் இயங்கும் டாடா குழுமத்தில் பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அதில் சில நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், பல நிறுவனங்கள் இன்னும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாமல் இருக்கிறது. நமது நாட்டின் மிகப் பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு இப்போது பாகிஸ்தானின் முழுப் பொருளாதாரத்தையும் விட பெரியதாக உருவெடுத்துள்ளது.
கடந்த ஓராண்டில் டாடா குழுமத்தின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களின் லாபம் பல மடங்கு அதிகரித்த நிலையில், அதன் சந்தை மதிப்பு இப்போது பாகிஸ்தானை விஞ்சி உள்ளது. டாடா குழுமத்தின் சந்தை மூலதனம் இப்போது $365 பில்லியனாக இருக்கிறது. அதே நேரம் இப்போது பாகிஸ்தானின் ஜிடிபி சுமார் $341 பில்லியனாக இருக்கும் சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது.
டாடா கன்சல்டன்சி: தனித்தனி நிறுவனங்களாகப் பார்க்கும் போது அதிகபட்சமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் $170 பில்லியன் மதிப்புடையதாக இருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் நிறுவனம் என்பது பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் பாதி அளவாக இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ், டைட்டன், டிசிஎஸ் மற்றும் டாடா பவர் என பல்வேறு நிறுவனங்களின் வருவாய் கடந்த ஓராண்டில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அந்த நிறுவனங்களின் சொத்து மதிப்பும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் குறைந்தது 8 டாடா நிறுவனங்கள் தங்கள் சந்தை மதிப்பை இரட்டிப்பாக்கி உள்ளன
அதிகரித்த சந்தை மதிப்பு: டிஆர்எப், ட்ரெண்ட், பெனாரஸ் ஹோட்டேல்ஸ், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்பொரேஷன், டாடா மோட்டார்ஸ், ஆட்டோமொபைல் கார்பொரேஷன் ஆப் கோவா அண்ட் அர்ட்ஸன் இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஓராண்டில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல அடுத்த ஆண்டு தனது ஐபிஓவை வெளியிட உள்ள டாடா கேபிட்டலின் சந்தை மதிப்பு ₹2.7 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

பாகிஸ்தான் பொருளாதாரம்: மறுபுறம் பாகிஸ்தான் ஜிடிபி கடந்த 2021இல் 5.8% வளர்ந்த நிலையில், 2022 நிதியாண்டில் அதன் வளர்ச்சி 6.1%ஆக இருக்கிறது. அங்கே கடந்த சில காலமாக ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்புகள் மிக மோசமான பாதிப்பை ஏற்புத்தியுள்லது. இதனால் பாகிஸ்தானால் தனது பல பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு உதவி வரும் நிலையில், அதன் $3 பில்லியன் திட்டமும் மார்ச் மாதத்தில் முடிவடைகிறது, அதே நேரத்தில் அதன் அந்நிய செலாவணி கையிருப்பு வெறும் $8 பில்லியனாக உள்ளது. இதனால் தற்போதைய சூழலில் பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது கடினம் தான். வரும் காலங்களில் அந்நாட்டின் நிதி நெருக்கடி மேலும் மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications