Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித் ஷா வீட்டிற்கு ஓடிய டாடா தலைவர்கள்.. ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போட்ட நிர்மலா! என்ன பிரச்சனை?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டின் முக்கிய கார்பரேட் குழுமமாக இருக்கும் டாடாவில் இப்போது மிகப் பெரிய குழப்பம் வெடித்துள்ளது. டாடா டிர்ஸ்ட் இரு பிரிவுகளாகப் பிரிந்துள்ள நிலையில், அதன் செயல்பாடுகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு தலையிட வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. டாடா குழுமத்தில் என்ன சிக்கல்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தியாவின் மிக பெரிய கார்பரேட் குழுமமாக டாடா இருக்கிறது. 156 ஆண்டுகள் பழமையான டாடா குழுமம் நமது நாட்டில் ஏகப்பட்ட பிஸ்னஸ்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. 10 ரூபாய் உப்பு முதல் பல கோடி மதிப்பிலான விமான பிஸ்னஸ் வரை எல்லாவற்றையும் டாடா குழுமம் நடத்தி வருகிறது. நாட்டின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனங்களில் ஒன்றாக டாடா குழுமம் இருக்கிறது.

Tata Trusts Turmoil Meeting in Amit Shah Home Urges Noel Tata to Restore Stability Amid crisis

டாடா குழப்பம்

கடந்தாண்டு தான் டாடா டிரஸ்ட் தலைவராக இருந்த ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து டாடா குழுமத்தில் மிக பெரிய சர்ச்சையும் குழப்பமும் வெடித்தது. இந்தக் குழப்பம் இப்போது பொதுவெளிக்கே வந்துள்ளது. டாடா குழுமத்திற்குள் ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடுகள், டாடா சன்ஸ் நிறுவனத்தையும் பாதிக்கும் நிலை உருவானது.

அமித்ஷா வீட்டில் ஆலோசனை

நிலைமை மோசமாகச் செல்வதால் நேற்றிரவு டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா, உறுப்பினர்கள் வேணு ஸ்ரீனிவாசன், டேரியஸ் கம்பாட்டா மற்றும் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் ஆகியோர் நேற்றிரவு அமித் ஷா இல்லத்திற்கு விரைந்தனர். அங்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. இப்போது டாடா குழுமத்திற்கு மத்திய அரசுத் தரப்பில் சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. டாடா டிரஸ்ட்டில் இருக்கும் குழப்பத்தைச் சரி செய்ய அறிவுறுத்தப்பட்டதாக தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

என்ன செய்தாவது நிலைத்தன்மையை மீட்டெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டாடா டிரஸ்டில் நிலவும் இந்த முரண்பாடுகள் டாடா நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடாது என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு உறுப்பினரையும் நீக்குவது உட்பட எந்தவொரு உறுதியான நடவடிக்கைகளையும் கூட மேற்கொள்ளுமாறு அரசுத் தரப்பு அறிவுறுத்தியது. சுமார் ஒரு மணி நேரம் இந்தக் கூட்டம் நடந்துள்ளது.

பிரச்சனை என்ன

டாடா டிரஸ்டில் இருக்கும் 4 உறுப்பினர்கள் "சூப்பர் போர்டு" போல செயல்பட்டு, தலைவர் நோயல் டாடாவின் அதிகாரத்தைக் குறைக்க முயல்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது டாடா அறக்கட்டளைகளில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

டாடா அறக்கட்டளைகள் இப்போது இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டு இருக்கிறது. ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா ஒரு பக்கம் இருக்கிறார். மற்றொரு பக்கம் தொழிலதிபர் மெஹ்லி மிஸ்திரி இருக்கிறார். மெஹ்லி மிஸ்திரியின் எஸ்.பி க்ரூப்பிற்கு டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 18.37% பங்கு உள்ளது. இருப்பினும், அந்தப் பங்குகளை விற்றுவிட்டு, டாடா குழுமத்தில் இருந்து வெளியேற மிஸ்திரி குடும்பம் விரும்புகிறது.

டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட்டால் மட்டுமே சரியான வேல்யூவேஷன் கிடைக்கும் என மிஸ்திரி தரப்பு கருதுகிறது. இருப்பினும், டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பட்டியலிட நோயல் டாடா விரும்பவில்லை. இதுவே இரு தரப்பிற்கும் இடையே பிளவு அதிகரிக்கப் பிரதானக் காரணமாகும்.

பூதாகரமாக வெடித்த சிக்கல்

கடந்த செப்டம்பர் 11ம் தேதி நடந்த கூட்டத்தில் தான் இந்தப் பிளவு வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது. அப்போது டாடா சன்ஸ் இயக்குநராக 77 வயதான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங்கிற்கு ஓராண்டு பதவி நீடிப்பு கொடுக்கும் திட்டத்தை நோயல் முன்மொழிந்தார். இருப்பினும், அதை மெஹ்லி மிஸ்திரி, பிரமித் ஜாவேரி, ஜஹாங்கீர் எச்.சி. ஜஹாங்கீர் மற்றும் டேரியஸ் காம்பட்டா ஆகிய நான்கு பேர் நிராகரித்தனர். மேலும், மிஸ்திரியை டாடா குழும தலைவராக நியமிக்கப் பரிந்துரைத்தனர். இருப்பினும், அதை நோயல் டாடா ஏற்கவில்லை.

அடுத்து என்ன

அப்போது முதலே டாடா டிரஸ்ட் விவகாரம் மெல்லப் பெரிதாகி வந்தது. நேற்று அரசு தலையிடும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது. அமைச்சர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், நான்கு பேரும் தனியாகவும் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதன் பிறகே அவர்கள் மும்பை திரும்பினர். நாளை அக்டோபர் 9ம் மறைந்த முன்னாள் டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடாவின் முதல் ஆண்டு நினைவு தின நிகழ்வு நடைபெறும் நிலையில், அதன் பிறகே முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+