டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

''பட்ஜெட்னு சொல்லிட்டு... பொதுத்துறை நிறுவனங்களை விக்கிறாங்க''...பொங்கி எழுந்த தேஜஷ்வி யாதவ்!

Google Oneindia Tamil News

டெல்லி: இது நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல; நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யும் பட்ஜெட் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஷ்வி யாதவ் கூறினார்.

இந்த பட்ஜெட்டில் எரிவாயு குழாய், சாலைவழிகள் மற்றும் கிடங்குகள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தேஜஷ்வி யாதவ் குற்றம் சாட்டினார்.

Tejashvi Yadav says budget not a for the development of the country; it sale of the countrys public sector companies

நாட்டின் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் 2021-22-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது மிகச்சிறப்பான பட்ஜெட் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த நிலையில் இது வளர்ச்சிக்கான பட்ஜெட் இல்லை. பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கான பட்ஜெட் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஷ்வி யாதவ் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஓகே...முன்கூட்டியே முடிகிறதா பட்ஜெட் கூட்டம் எதிர்க்கட்சிகள் ஓகே...முன்கூட்டியே முடிகிறதா பட்ஜெட் கூட்டம்

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கானது அல்ல; நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யும் பட்ஜெட் இதுவாகும். ஏற்கனவே அவர்கள்(மத்திய அரசு) ரெயில்வே, ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களை விற்றனர். இந்த பட்ஜெட்டில் எரிவாயு குழாய், அரங்கம், சாலைவழிகள் மற்றும் கிடங்குகள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தேஜஷ்வி யாதவ் கூறினார்.

English summary
Rashtriya Janata Dal leader Tejashvi Yadav said This is not a budget for the development of the country; the budget was for the sale of the country's public sector companies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X