"நவம்பர் 18ல் பீகார் முதல்வராக பதவியேற்பேன்”.. தேர்தலுக்கு முன்பே தேதி குறித்த தேஜஸ்வி யாதவ்!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறியுள்ள ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், தன்னுடைய பதவி ஏற்பு விழா தேதியை அறிவித்துள்ளார். நவ.14ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும், நவ.18ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் இளைஞர்கள் எனக்கு 5 ஆண்டுகள் ஆட்சியமைக்க வாய்ப்பளித்தால் போதும் என்று மகாகத்பந்தன் கூட்டணியின் பீகார் மாநில முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் டிஜிட்டல் பிரச்சாரத்தில் வாக்கு சேகரித்துள்ளார்.

பீகார் சட்டசபைக்கு இந்த மாதம் இரு கட்டங்களாக (நவம்பர் 6, 11) தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டசபைத் தேர்தலையொட்டி பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்குமா அல்லது தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஃபேஸ்புக் சமூக ஊடகத் தளத்தில் நேரலையில் பிரசாரத்தில் ஈடுபட்ட தேஜஸ்வி யாதவ் பேசுகையில், "பீகார் இளைஞர்களிடம் நான் ஒன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையில், ஒரேயொருமுறையாவது மகாகத்பந்தன் கூட்டணிக்கு வாக்கு செலுத்துங்கள் வேலை, சிறந்த வாய்ப்புகளுக்காக மற்றும் பீகாரின் மேம்பாட்டுக்காக இதனைச் செய்யுங்கள்.
நான் ஒன்றும் உங்களிடம் 20 ஆண்டுகள் வாய்ப்பு கேட்கவில்லை. உங்களின் பேராதரவு எனக்கு வெறும் ஐந்தாண்டுகளுக்கு போதும். ஒருவேளை நான் அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தவறினால், எனக்கு நீங்கள் அதன்பின் வாக்கு செலுத்தவே வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறியுள்ள ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், தன்னுடை பதவி ஏற்பு விழா தேதியை அறிவித்துள்ளார். நவ.14ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும், நவம்பர் 18 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகாரின் அர்ராவில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி,'மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. ஆனால் ஆர்ஜேடி, காங்கிரஸின் தலையில் ஒரு துப்பாக்கியை வைத்து முதல்வர் வேட்பாளரை அறிவிக்க கட்டாயப்படுத்தினர். ஆர்ஜேடிக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. ' எனக் கூறி இருந்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications