Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்களுக்கு ஒரே தவணையாக ரூ.30,000.. பீகாரில் "இந்தியா" கூட்டணியின் பிரம்மாஸ்திரம்! அதிரடி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகாரில் நாளைய தினம் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கிடையே கடைசி பிரம்மாஸ்திரமாகத் தேஜஸ்வி யாதவ் நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ரூ.30,000 உதவித்தொகை ஒரே தவணையாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. நாளைய தினம் முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நவம்பர் 11ம் தேதி மீதமுள்ள தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Tejashwi Yadav Promises Rs 30 000 One-Time Aid for Women in Bihar Elections Mai Behen Maan Yojana

பெண்களுக்கு ரூ.30,000

இதற்கிடையே பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு உறுதியளிக்கப்பட்ட உதவித்தொகை அடுத்த ஆண்டு ஜனவரியில் ஒரே தவணையாக ரூ.30,000ஆக என்று அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்தார். அங்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், தேஜஸ்வியின் இந்த அறிவிப்பு ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அங்கு ஆளும் என்டிஏ கூட்டணி முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்திருந்தது. அத்திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்குச் சொந்தத் தொழில் தொடங்க ரூ. 10,000 வழங்கப்படும். இதற்குப் போட்டியாகவே தேஜஸ்வி யாதவ் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

ஒரே தவணையாக வழங்குவோம்

பாட்னாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேஜஸ்வி யாதவ் மேலும் கூறுகையில், "மகர சங்கராந்தி அன்று (ஜனவரி 14) மை பஹின் மான் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஒரே தவணையாக ரூ.30,000 வழங்கப்படும். நான் பல இடங்களுக்குச் சென்று பெண்களுடன் கலந்துரையாடினேன். பீகாரில் உள்ள அனைத்துத் தாய்மார்களும் சகோதரிகளும் 'மை பஹின் மான் யோஜனா' திட்டத்தை வரவேற்கிறார்கள். இந்தத் திட்டம் அவர்களுக்கு நிச்சயம் பொருளாதாரச் சுதந்திரத்தை வழங்கும்" என்றார்.

முன்னதாக பீகாரில் இந்தியா கூட்டணி வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில்.. வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 என்ற விகிதம் ஆண்டுக்கு ரூ.30,000 உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்றும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் தான் இறுதி பிரம்மாஸ்திரமாக இந்தத் தொகை ஒரே தவணையாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் வழங்கப்படும் எனத் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார்.

விவசாயிகள்

இது மட்டுமின்றி வேறு சில முக்கிய வாக்குறுதிகளையும் அவர் வெளியிட்டிருந்தார். குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் கூடுதலாக விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.300 , ஒரு குவிண்டால் கோதுமைக்கு ரூ. 400 போனஸாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். அங்கு விவசாயிகள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் சூழலில் இந்த வாக்குறுதி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள்

ஆசிரியர்கள், போலீசார், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு அவர்கள் சொந்த மாவட்டத்திலிருந்து 70 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் பணி இடமாற்றமும், பணி நியமனமும் உறுதி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். அதேபோல பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மீண்டும் உறுதியளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+