டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறப்பாக செயல்படும் முதல்வர்கள்.. சந்திரசேகர ராவ் பர்ஸ்ட், பழனிசாமி லாஸ்ட்

Google Oneindia Tamil News

டெல்லி:சிறந்த முதல்வர்கள் யார் என்று நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் முதலிடத்தை பிடித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைசி இடத்தில் உள்ளார்.

சி வோட்டர்ஸ் ஐஏஎன்எஸ் நிறுவனம் சார்பில் வாக்காளர்களிடம் மாநில முதல்வர்கள் செயல்பாடுகள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் நாட்டில் உள்ள மாநிலங்களின் முதல்வர்கள் செயல்பாடுகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.அந்த கருத்து கணிப்பில் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவின் செயல்பாடு திருப்திகரமாகவும், சிறப்பாகவும் உள்ளதாக வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளைக்கு பாருங்க... யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்... வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டிநாளைக்கு பாருங்க... யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்... வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி

முதலிடத்தில் கேசிஆர்

முதலிடத்தில் கேசிஆர்

அவர் அந்த பட்டியலில் முதல் இடத்தை தட்டிச் சென்றிருக்கிறார். அவருக்கு 68.3 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர். அவர்கள் அனைவரும் கேசிஆரின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

நவீன் பட்நாயக்

நவீன் பட்நாயக்

2வது இடத்தில் இமாச்சல் பிரதேசத்தின் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் உள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

4வது இடம்

4வது இடம்

தலைநகர் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4வது இடத்திலும் கர்நாடக முதல்வர் குமாரசாமி 5-வது இடத்திலும் உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சிறப்பாக இல்லை என்று வாக்களித்தவர்கள் கூறி இருக்கின்றனர். இவர்களை போல, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தர்காண்ட் முதல்வர் திரிவேந்திரசிங் ராவத் ஆகியோரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும் வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடைசி இடத்தில் எடப்பாடி

கடைசி இடத்தில் எடப்பாடி

சிறப்பாக செயல்பட்ட முதல்வர் பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைசி இடத்தில் உள்ளார். 42% அவரின் செயல்பாடு, நிர்வாகம் ஆகியவை திருப்திகரமாக இல்லை என்று வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாதகம் இல்லை

சாதகம் இல்லை

லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவுக்கு அது சாதகமாக இருக்காது என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய 2 மாநில முதல்வர்கள் மட்டுமே முதல் 10 இடங்களில் உள்ளனர்.

English summary
Telangana's K. Chandrashekhar Rao is the top performer among the Chief Ministers in the country followed by his counterparts in Himachal Pradesh, Odisha and Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X