தேர்தல் முடிந்தவுடன்.. எகிற போகுது மொபைல் ரீசார்ஜ் கட்டணம்.. எந்தளவுக்கு அதிகரிக்கும் தெரியுமா
டெல்லி: நமது நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்த உடன் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் கட்டணத்தை 15 முதல் 17% வரை அதிகரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் டெலிகாம் துறை ரொம்பவே முக்கியமானது. இப்போது ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தான் டெலிகாம் துறை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது தவிர வோடபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்களும் உள்ளன.

கட்டண உயர்வு: இதற்கிடையே லோக்சபா தேர்தலுக்குப் பிறகு டெலிகாம் நிறுவனங்களின் கட்டணம், அதாவது மொபைல் ரீசார்ஜ் கட்டணம் 15 முதல் 17 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெலிகாம் துறையில் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவது தவிர்க்கவே முடியாதது என்றும் இதன் மூலம் ஏர்டெல் நிறுவனமே அதிக பயன் பெறும் என்றும் ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதன் பிறகு டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்தலாம் என்று Antique Stock Broking நிறுவனம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு 15 முதல் 17 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடைசியாக எப்போது: கடைசியாகக் கடந்த 2021 டிசம்பரில் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை சுமார் 20 சதவீதம் வரை உயர்த்தி இருந்தது. இப்போது சுமார் 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்டண உயர்வுக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனம்: எந்தவொரு டெலிகாம் நிறுவனத்திற்கும் ஒவ்வொரு பயனாளரிடம் இருந்து பெறும் சராசரி வருமானம் முக்கியம். இதை ஆங்கிலத்தில் ARPU என்று குறிப்பிடுவார்கள். ஏர்டெல் நிறுவனத்தின் ARPU இப்போது ரூ.208ஆக இருக்கும் நிலையில், அதை சில ஆண்டுகளில் ரூ.286 ஆக அதிகரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது சிறிய அதிகரிப்பு போல தோன்றினாலும் பயனாளர்கள் அதிகம் இருப்பதால் ஏர்டெலுக்கு வருவாய் மிக பெரியளவில் உயரும்.
அதாவது சுமார் 78 ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. அதில் கட்டண உயர்வால் ரூ.55 கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.. அதேபோல 2ஜி சேவையில் இருந்து 4ஜி சேவைக்கு மாறுவதால் 9 ரூபாயும் போஸ்ட்பெய்டுக்கு மாறுவதன் மூலம் ரூ.14 கூடுதல் வருவாய் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
போட்டி: அடுத்து வரும் ஆண்டுகளில் ஏர்டெல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு இரண்டு சதவிகிதமாக அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சராசரியாக டெலிகாம் நிறுவனங்கள் ஒரு சதவிகித வளர்ச்சியை மட்டுமே தரும் நிலையில், அதை விட ஏர்டெல் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்பதே இதன் பொருளாகும். கடந்த 5, 6 ஆண்டுகளாகவே ஏர்டெல், ஜியோ பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், வோடபோன், ஜியோ பயனாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் தான் லோக்சபா தேர்தலுக்குப் பிறகு கட்டண உயர்வு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கட்டண உயர்வைப் பொறுத்தவரை எப்போதும் முதலில் ஒரு நிறுவனம் உயர்த்தினால் உடனடியாக மற்ற நிறுவனங்களும் உயர்த்திவிடும். கடந்த காலங்களிலும் இதை நாம் பார்த்து இருக்கிறோம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications