கொரோனா மீண்டும் கோரத்தாண்டம்.. புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.. மத்திய அரசு அதிரடி உத்தரவு
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில். புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி, டிராக் செய்து அனைவருக்கும் சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் நெறிமுறையில் தெரிவித்துள்ளது.
ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளின் விகிதம் குறைவாக இருக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அதை விரைவாக அதிகரிக்க வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட அளவான 70 சதவீதம் அல்லது அதற்கு மேல் அடைய வேண்டும்.

தனிமைப்படுத்துதல்
தீவிரமான சோதனையின் விளைவாக கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளை, விரைவாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையை வழங்க வேண்டும். மேலும், நெறிமுறையின்படி, அவர்களின் தொடர்புகளை விரைவாக தனிமைப்படுத்த வேண்டும். .கட்டுப்பாட்டு மண்டலங்களின் பட்டியல் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் வலைத்தளங்களில் அறிவிக்கப்படும். இந்த பட்டியல் வழக்கமான அடிப்படையில் உள்துறை அமைச்சகத்துடன் பகிரப்படும். கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள், உள்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகக் கடுமையாக பின்பற்றப்படும்.

அதிகாரிகள்
பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய உள்ளூர் மாவட்டம், காவல்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும், மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்புணர்வை மாநில /யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

மக்கள் செய்ய வேண்டியவை
கோவிட் -19க்கு பொருத்தமான நடத்தைகளை பணியிடங்களிலும், பொது இடங்களிலும், குறிப்பாக நெரிசலான இடங்களில் ஊக்குவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்கள் எடுக்க வேண்டும். முககவசம் அணிவது, கை சுகாதாரம் மற்றும் சமூக தூரத்தை பின்பற்றுவதை கடுமையாக அமல்படுத்துவதற்கு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பொருத்தமான அபராதம் விதித்தல் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகளை பரிசீலிக்கலாம்.
கோவிட் -19 நிர்வாகத்திற்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளை நாடு முழுவதும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். ,

தடை கூடாது
மாநிலங்களுக்கு இடையே தனி நபர் நகர்வு போக்குவரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது. மாநிலத்திற்குள் தனிநபர் நகர்வு, போக்குவரத்துக்கு கட்டுப்பாடு செய்யக்கூடாது. சூழலை பொறுத்து மாவட்ட, நகர அளவில் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்தலாம். மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மாநிலங்களுக்குள் செல்ல எந்தவிதமன இபாஸ் முறையும் எந்த மாநிலமும் பின்பற்றக்கூடாது.

செயல்படுத்த வேண்டும்
பயணிகள் ரயில்களின் இயக்கம்; விமான பயணம்; மெட்ரோ ரயில்கள்; பள்ளிகள்; உயர் கல்வி நிறுவனங்கள்; ஹோட்டல் மற்றும் உணவகங்கள்; வணிக வளாகங்கள், மல்டிபிளெக்ஸ் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள்; யோகா மையங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள்; கண்காட்சிகள், கூட்டங்கள் மற்றும் சபைகள் போன்றவற்றில் பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வப்போது திருத்தப்பபடும் வழிகாட்டு நெறிமுறைகளை அதிகாரிகள் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்.

தடுப்பூசி இயக்கம்
தடுப்பூசி இயக்கம் சீராக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் வேகம் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சமமாக இல்லை; மேலும், சில மாநிலங்கள் / யூ.டி.க்களில் தடுப்பூசியின் மெதுவான வேகம் கவலைக்குரியதாக உள்ளது. கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி, தற்போதைய சூழ்நிலையில், மிகவும் முக்கியமானது.
எனவே, அனைத்து மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்களும் தடுப்பூசியின் வேகத்தை விரைவாக அதிகரிக்க வேண்டும். விரைவாக தடுப்பூசிகளை போட வேண்டும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications