மூத்த குடிமக்களுக்கு சூப்பர் அறிவிப்பு..பச்சைக் கொடி காட்டிய பிரதமர் மோடி! அமைச்சரவை முக்கிய முடிவு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவு படுத்துவது, நீர் மின் சக்தி திட்டங்களுக்கு ஊக்கம் அளிப்பது மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் நான்காம் கட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
புருனே, சிங்கப்பூர் பயணத்திற்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி இந்தியா திரும்பிய நிலையில் இன்று தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் பல முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குறிப்பாக ஆயுஷ்மான் பாரத் மருத்துவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சுமார் 5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இது தவிர பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நான்காம் கட்டமாக 25 ஆயிரம் கிராமங்களுக்கு சுமார் 62,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைப்பது, மின்சார ஆம்புலன்சுகளுக்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, நீர்மின் திட்டங்களுக்கு சுமார் 12,000 கோடி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
குறிப்பாக ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,”ஆயுஷ் மான் பாரத் திட்டம் இந்தியாவின் மிக முக்கியமான திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை விரிவு படுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்கள் அனைவருக்கும் 5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சை வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பயன்படு ம் இலட்சக்கணக்கான குடும்பங்களில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கும் கூடுதலாக வருமானத்தை கருத்தில் கொள்ளாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இதற்காக 5 லட்சம் வரையிலான சிகிச்சைக்கு கூடுதலாக டாப் அப் செய்து கொள்ளலாம். இந்த அறிவிப்பின் மூலமாக இந்தியா முழுவதும் வசிக்கும் சுமார் நான்கரை கோடி குடும்பங்களில் உள்ள ஆறு கோடிக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பயன் பெறுவார்கள். மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு தகுதி வாய்ந்த மூத்த குடிமக்களுக்கு தனித்துவமான அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்தார்.
உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா, 50 கோடிக்கும் அதிகமான இந்தியக் குடிமக்களுக்கு, குறிப்பாகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்குப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வரும் நிலையில் அதனை விரிவுபடுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications