mpox in india: இந்தியாவுக்குள் நுழைந்த குரங்கு அம்மை.. இளைஞர் ஒருவருக்கு உறுதி! மத்திய அரசு அலர்ட்
டெல்லி : உலக அளவில் மீண்டும் குரங்கு அம்மை பாதிப்பு குறித்த அச்சம் எழுந்திருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசர நிலையை அறிவித்திருக்கிறது. இந்நிலையில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கு பிறகு தற்போது உலக அளவில் சுகாதார அச்சுறுத்தலை குரங்கு அம்மை ஏற்படுத்தி இருக்கிறது. ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது 116 நாடுகளில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கிறது.

காங்கோவில் பரவத் தொடங்கிய பாதிப்பில் தற்போது மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி இருக்கிறது. இதுவரை 15,000 மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர்.
தற்போது ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதை அடுத்து ஐரோப்பிய நாடுகள் கூட தங்கள் நாடுகளில் குரங்குக்கு அம்மை பாதிப்பு இருக்குமா என அச்சத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தற்போது பாதிப்பு இல்லை என்றாலும் உச்சகட்ட சுகாதார நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது.
குரங்கு அம்மை பாதிப்பு காற்றின் மூலம் பரவாது என்றாலும் ஏற்கனவே பாதிப்பில் இருக்கும் நபருடன் உடல் ரீதியான தொடர்பு, இரண்டு மீட்டருக்குள் மூன்று மணி நேரத்திற்கும் மேல் இருக்கும்போது நீர்த்துளிகள் மூலமாக இந்த தொற்று ஏற்படுகிறது. கொரோனாவுக்கு பிறகு மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக இருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த பிரச்சனையை பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
இந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் குரங்கு அம்மை பாதிப்பு தொடர்பாக தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று ஏற்கனவே குரங்கு அம்மை பாதிப்பு இருக்கும் ஒரு நாட்டிலிருந்து சமீபத்தில் இந்தியா திரும்பிய இளைஞர் ஒருவரை குரங்கு அம்மை தொற்று அறிகுறிகள் காரணமாக சந்தேக நபராக அடையாளம் கண்டு அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது சோதனை மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அவருக்கு மேற்கு ஆப்பிரிக்க கிளேட்- 2 எம்-பாக்ஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
அதே நேரத்தில் உலக சுகாதார நிறுவனம் அவசர நிலை தொடர்பாக அறிவிக்கப்பட்ட கிளேட்-1 வைரசுடன் தொடர்பு கொண்டது இல்லை எனவும் தற்போது அவருக்கு மூன்றாம் நிலை பராமரிப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவ ரீதியாக நலமாக இருப்பதாகவும் நோய் தொடர்பான பெரிய அளவில் பாதிப்பு இல்லை என மத்திய அரசு கூறி இருக்கிறது.
இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை தீவிர படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலும் போதுமான மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் பரிசோதனை கருவிகள் கையிருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், பொது மக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படுவதை தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் மத்திய அரசுக்கு குறிப்பிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications