வாக்கு எண்ணிக்கையில் புதிய மாற்றம்.. ரிசல்ட் வர லேட்டாகும்!
5 மாநில தேர்தல் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும் என கூறப்படுகிறது.
Recommended Video

டெல்லி: வழக்கம்போல இல்லாமல் இந்த முறை 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கைகளில் ஒரு புது மாற்றம் வந்திருக்கிறது.
பொதுவாக, ஓட்டு எண்ணும் மையத்தில், 'முடிவு' பட்டனை அழுத்தியதும், அங்குள்ள ஒரு ஸ்கிரீனில் அந்த சாவடியில் பதிவான மொத்த ஓட்டுகள் மற்றும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்துள்ள ஓட்டுகள் என வரிசையாக தோன்றும்.
இதனை எல்லோரும் குறித்து வைத்து கொள்வார்கள். இப்படியே ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், அது குறித்து வைத்துகொள்ளப்பட்டு, கடைசியாக மொத்தமாக கூட்டி சுற்று அடிப்படையில் முடிவுகளை அறிவிப்பார்கள்.

மறுத்த ஆணையம்
ஆனால் இந்த ஓட்டு எண்ணும் முறையை மாற்ற வேண்டும் என்று பலமுறை தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அதனை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தே வந்தது.

தட்டி கழித்தது
ஒருவேளை இந்த முறையில் முறைகேடு ஏதாவது நடந்ததாக தெரிந்தாலோ, அல்லது நிரூபிக்கப்பட்டாலோ வேறு முறையை மாற்றலாம் என்று தேர்தல் ஆணையம் தட்டி கழித்து கொண்டே வந்தது. அதற்கேற்றபடி ஒரு அரசியல் கட்சியும் இதுவரை எந்த முறைக்கேட்டையும் கையும் களவுமாக பிடித்து தரவில்லை.

அடுத்த சுற்று
ஆனால் இந்த முறை ஓட்டு எண்ணிக்கையின்போது புது யுக்தி கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு சுற்றிலும் அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் உள்ள பதிவான வாக்குகளை எண்ணி முடித்த பிறகே அடுத்த சுற்றுக்குப் போகவுள்ளனர்.

லேட் ஆகும்
எனவே இந்த முறை முடிவுகள் நமக்கு உடனுக்குடனே தெரியவராது. ஒவ்வொரு மிஷினிலும் உள்ள வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, அடுத்த மிஷினில் உள்ள பதிவான வாக்குகள் எண்ணும்வரை நிறைய டைம் இருக்கும். இதனால் ஒவ்வொரு சுற்றிலிருந்து இறுதியாக முடிவு அறிவிக்கப்படும் வரை எல்லாமே லேட் ஆகும் என்று தெரியவந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications