அமலாக்கத்துறையின் 5 மணி நேர விசாரணை.. ஐஸ்வர்யா ராயிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்னென்ன தெரியுமா?
டெல்லி: பனாமா பேப்பர் வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை 5 மணி நேரங்களுக்கு பிறகு நிறைவடைந்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான பணமா பேப்பர்ஸ் ஆவணங்களில் இந்தியாவைச் சேர்ந்த நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் அவரது மாமனாரும் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட படங்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
அந்த ஆவணத்தின் அடிப்படையில் இந்திய அமலாக்கத்துறை 2017 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது இந்திய ரிசர்வ் வங்கியின் தாராளமாக பணம் அனுப்புதல் திட்டத்தின் கீழ் 2004ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு பணம் அனுப்பியதற்கு விளக்கம் அளிக்குமாறு பச்சன் குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நடிகை ஐஸ்வர்யா ராய்
அமலாக்க இயக்குனர் அலுவலக வட்டாரங்களில் கிடைத்த தகவல் படி , 2004ஆம் ஆண்டு பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் அமிக் பார்ட்னர்ஸ் என்ற ஆஃப்ஷோர் நிறுவனத்தில் ஐஸ்வர்யா ராய் இயக்குநராக இணைக்கப்பட்டதாகவும், சட்ட நிறுவனமான மொசாக் பொன்சேகா இந்த நிறுவனத்தை பதிவுசெய்தது எனவும், இது 50,000 டாலர் மூலதனத்தைக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.நடிகர் 2009இல் ஐஸ்வர்யாராய் நிறுவனத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படும் நிலையில், துபாயைச் சேர்ந்த BKR டோனிஸ் நிறுவனத்தால் அது வாங்கப்பட்டது.

அமலாக்கத்துறை சம்மன்
ஐஸ்வர்யா ராய் கடந்த 15 ஆண்டுகளில் பெற்ற வெளிநாட்டுப் பணம் குறித்த பதிவேடுகளை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், சம்மன் அனுப்பபட்ட போது இரண்டு முறை கூடுதல் அவகாசம் கேட்டு ஐஸ்வர்யா ராய் மனு செய்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென அமலாக்கத் துறை இயக்குனரகம் மீண்டும் சம்மன் அனுப்பியது இதையடுத்து ஐஸ்வர்யா ராய் இன்று டெல்லி அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து அவரது வாக்குமூலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி அவர் அளித்த பதில்களை பதிவு செய்தனர்.

எழுப்பப்பட்ட கேள்விகள்
அமிக் பார்ட்னர்ஸ் என்பது பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் 2005 இல் இணைக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனமாகும் இந்த நிறுவனத்துடன் உங்களுக்கு என்ன தொடர்பு உள்ளது? , மொசாக் பொன்சேகா நிறுவனத்தை பதிவு செய்த சட்ட நிறுவனம் எது தெரியுமா? இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் நீங்கள், உங்கள் தந்தை கோடேதிராமன் ராய் கிருஷ்ணா ராய், உங்கள் தாய் கவிதா ராய் மற்றும் உங்கள் சகோதரர் ஆதித்யா ராய் ஆகியோர் அடங்குவர் இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல முடியும்? என்பது உள்ளிட்ட 8 கேள்விகள் ஐஸ்வர்யா ராயிடம் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 மணி நேர விசாரணை முடிவு
மேற்கண்ட கேள்விகளுக்கு ஐஸ்வர்யா ராய் அளித்த பதில்களை பதிவு செய்து கொண்ட அதிகாரிகள் இது தொடர்பாக மேலும் பல ஆவணங்களை திரட்ட முடிவு செய்துள்ளார் மேலும் அடுத்த கட்ட விசாரணைக்கு ஐஸ்வர்யா ராய் ஆஜராக வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. 5 மணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த ஐஸ்வர்யா ராயிடம் நிருபர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால்யாரிடமும் பேசாமல் ஐஸ்வர்யா ராய் உடனடியாக அங்கிருந்து வெளியேறிச் சென்றார்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications