பெட்ரோல் டீசலுக்கு குட்பை! கார் வாங்குவோருக்கு மாஸ்ஸான செய்தி! இனி மேல் அந்த பிரச்சினை இல்லை
டெல்லி: நமது நாட்டில் கார்களுக்கு பெட்ரோல் போட்டே மாளவில்லை என்று புலம்புவர்களுக்கு அட்டகாசமான தீர்வு மிக விரைவில் வர உள்ளது.
Recommended Video
கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வீடுகளில் முடங்கி இருந்ததால் குறைந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் மளமளவென உயர்ந்தது. இதனால் ஒரு கட்டத்தில் 110 டாலர் வரை சென்றது.
இதன் காரணமாகச் சர்வதேச அளவிலும் பெட்ரோல், டீசல் விலை மளமளவென உயரத் தொடங்கியது. இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கார் நிறுவனங்கள்
குறிப்பாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையேற்றும் அனைத்து தரப்பினரையும் கடுமையாகப் பாதித்தது. கச்சா எண்ணெய்யை டாலரில் தான் வாங்க முடியும் என்பதால், இந்தியாவின் அந்நிய செலாவணியும் காலியாகிறது. மேலும், இந்திய ரூபாயின் மதிப்பும் சர்வதேச அளவில் தொடர்ந்து வீழ்ச்சி அடைவதால், கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதன் பலன் மக்களுக்குச் சென்றடைவதில்லை. இதனால் கார் விற்பனையும் குறையத் தொடங்கி உள்ளது.

மின்சார கார்கள்
இதன் காரணமாக கார் நிறுவனங்கள் வேறு வழிகளைச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உலகெங்கும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் மீதான கவனம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய நிறுவனங்களும் அந்தப் பக்கம் சென்றுள்ளன. நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் வேலையில், இரு இந்திய நிறுவனங்கள் மின்சார கார்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

மகேந்திரா & மஹேந்திரா
முதலில் மகேந்திரா & மஹேந்திரா நிறுவனம். சரக்கு வாகனங்களில் இருக்கும் அளவுக்கு மகேந்திரா நிறுவனத்திற்கு கார்களில் சந்தை இல்லை. மின்சார வாகனங்கள் வரும்போது, விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே அவர்கள் எண்ணம். இதன் காரணமாகவே மகேந்திரா நிறுவனம் இப்போது புதிதாக இந்தியன் குளோபல் (INGLO) என்ற பிளாட்வார்மை முன்னெடுத்துள்ளது.

புதிய பிராண்ட்கள்
மின்சார வாகனங்களுக்கு என்றே தனியாக XUV & BE என்ற தனி பிரண்டகளை மகேந்திரா நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதில் XUV பிராண்டில் 2024 முதலும் BE பிராணடில் அக்டோபர் 2025 முதலும் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது. மேலும், கார்களுக்கான பேட்டரி சப்ளேவுக்கு சீன நிறுவனங்களைத் தவிர்த்து ஐரோப்பிய நிறுவனமான வோல்ஸ்வேகன் உடன் மகேந்திரா ஒப்பந்தம் போட்டுள்ளது.

ஒலா
மறுபுறம் ஒலா நிறுவனமும் மின்சார கார்கள் மார்கெட்டில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் மின்சார கார்களை தயாரிக்க உள்ளதாக ஒலா அறிவித்துள்ளது. குறிப்பாக ஒலாவின் இந்த புதிய கார் மாடல் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 500 கிலோமீட்டர் வரை செல்லலாம் என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒலா ஸ்கூட்டர்களே சொதப்பிய நிலையில், ஒலாவின் அறிவிப்பைச் சந்தேகத்துடனேயே சந்தை வல்லுநர்கள் பார்க்கிறார்கள்.

டாடா மோட்டர்ஸ்
இந்தியாவில் மின்சார கார்கள் சந்தையில் முன்கூட்டியே நுழைந்தது டாடா மோட்டர்ஸ். டாடாவின் நெக்ஸான் மற்றும் டைகர் கார்கள் தான் இந்தியாவில் இப்போது வரை அதிகம் விற்பனையாகும் மின்சார கார்களாக உள்ளன. இந்தச் சூழலில் தான் கடந்த ஏப்ரல் மாதம் ஃபாஸ்ட் சார்ஜ் மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 400-500 கிமீ தூரம் செல்லும் வகையிலான புதிய SUV Curvv என்ற மாடலை அறிமுகப்படுத்தி இருந்தது. குஜராத்தில் டாடா சமீபத்தில் கையகப்படுத்தி தொழிற்சாலை மூலம் உற்பத்தியை அதிகப்படுத்த உள்ளது.

விலை குறையும்
இதுமட்டுமின்றி அடுத்து வரும் காலத்தில் 7 முதல் 12 லட்ச ரூபாய் வரை பல புதிய மின்சார கார்களையும் அறிமுகப்படுத்த உள்ளது. அதிக விலையே மின்சார வாகனங்களில் பொதுவாக இருக்கும் சிக்கலாக இருந்தது. இப்போது அதிகப்படியான நிறுவனங்கள் மின் வாகனச் சந்தையில் குதித்து உள்ளன. போட்டி அதிகரித்தால் விலை குறையும் என்பதே உலக நிதி. இந்திய மின் வாகனச் சந்தையில் போட்டிகள் அதிகரித்து மின் கார்கள் விலை குறைந்தால், பெட்ரோல் விலையேற்றத்தில் இருந்து நாம் எஸ்கேப் ஆகிவிடலாம்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்!












Click it and Unblock the Notifications