கொரோனா.. 'ஆபத்தான கட்டத்தில் இந்தியா..' மக்களின் மெத்தனம்தான் காரணம்: மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை
டெல்லி: மக்களிடையே முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்ததன் காரணமாக தற்போது நாடு ஆபத்தான நிலையில் உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வகை வைரஸ் பரவல் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவிய இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 25க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் 9 பேர் வெளிநாடு சென்ற பயண வரலாறு இல்லாதவர்கள், எனவும் 14 பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் அதிகரிப்பு
ஐரோப்பாவின் பல நாடுகளில் திடீரென கொரோனா திடீரென அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஓமிக்ரான் வகை மிகவும் பரவக்கூடிய திரிபு மாறுபாடாக இருப்பதாகவும் , இந்தியாவில் முகக்கவசம் பயன்படுத்துவது ஏற்கனவே இருந்ததை விட தற்போது குறைந்து விட்டதால் இந்தியா ஆபத்து மண்டலத்துக்குள் நுழைந்து உள்ளது என அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 25 ஓமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறும் அதிகாரிகள், தற்போது கிடைத்த தகவல்களின்படி 9 வழக்குகள் அறிகுறி உள்ளதாகவும், 14 பேர் அறிகுறி அற்ற நிலையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களில் 9 பேர் வெளிநாடு பயணம் மேற்கொண்டு இருக்கவில்லை எனவும் அரசு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டவர்களுக்கும் ஓமிக்ரான்
குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களில் 14 நபர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய மாறுபாடு வைரஸ்களால் பாதிக்கப்பட்டவர்கள் 8 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 5 பேர் பைசர் தடுப்பூசிகளையும் ஒருவர் சினோவாக் தடுப்பூசியும் எடுத்துக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முகக்கவசம் பயன்பாடு சரிவு
இந்தியாவின் கோவிட் - 19 பணிக் குழுவின் தலைவர் டாக்டர் பால் இதுகுறித்து கூறும்போது, புதிய ஓமிக்ரான் பரவலுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறன் இன்னும் ஆராயப்பட்டு வருகிறது என்றார். மேலும் முகக்கவசம் பயன்பாடு ஒரு உலகளாவிய மற்றும் சமூக தடுப்பூசி என்றும், இது எந்த மாறுபாடுக்கும் எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நமது நாட்டில் தற்போது முகக்கவசம் பயன்பாட்டை மதிப்பீடு செய்வதில் மக்களை விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதுகுறித்து மதிப்பீடுகள் செய்துவரும் இன்ஸ்டியூட் பார் ஹெல்த் அண்ட் எவாலியூசன் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆபத்து மண்டலத்தில் இந்தியா
கொரோனா இரண்டாவது அலைக்கு முன்பு முகக்கவசம் பயன்பாடு மிக குறைந்த அளவிலிருந்து மே மாதத்தில் அதிக அளவில் உயர தொடங்கியது. மக்கள் பயத்தின் காரணமாக அதிக அளவில் முககவசம் அணிய தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் முககவச பயன்பாடு சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் ஏற்கனவே இருந்த பழைய நிலைக்கே திரும்பி விட்டதாகவும், உண்மையில் மார்ச் மாத அளவோடு ஒப்பிடுகையில் அதிக அளவு முகக்கவசம் பயன்பாடு குறைந்துள்ளதாகவும் இதன் காரணமாக ஆபத்து மண்டலத்திற்குள் இந்தியா நுழைந்து விட்ட நிலையில், தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பு திறன் பார்வையில் இப்போது மிகவும் கீழ்மட்டத்தில் செயல்படுவதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்தான நிலை என டாக்டர் பால் குறிப்பிட்டுள்ளார்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications