தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
டெல்லி: தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடுவதற்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி அத்திரைப்பட தயாரிப்பு தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. மேலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மேற்கு வங்க அரசு தடை விதித்ததையும் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் இத்திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு அப்படி எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் இத்திரைப்படம் திரையிட்ட திரையரங்குகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தமிழ்நாட்டில் கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடுவதை திரையரங்க உரிமையாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

அதேநேரத்தில் இத்திரைப்படம் மத மோதலை ஏற்படுத்தக் கூடியது என்பதால் தடை விதிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்திருந்தார். ஏற்கனவே இத்திரைப்படத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து கேரளா உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. கேரளா உயர்நீதிமன்றமும் இத்திரைப்படத்துக்கு தடை விதிக்க மறுத்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீது வரும் 15-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
இதனிடையே தி கேரளா ஸ்டோரி படத் தயாரிப்பு தரப்பு உச்சநீதிமன்றத்தில் இன்று இரு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் திரையரங்குகளில் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிடுவதற்கு ஏதுவாக உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்பது ஒரு மனு. அதேபோல மேற்கு வங்க அரசின் தடையை நீக்க கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கேரளாவில் இந்துப் பெண்களை இஸ்லாம் மதத்துக்கு மதம் மாற்றுகின்றனர்; அப்படி மதம் மாற்றப்படுகின்ற பெண்கள், ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களின் பாலியல் அடிமைகளாக்கப்படுகின்றனர் என்பதாக தி கேரளா ஸ்டோரி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது பொய்யான புனைவுகளின் அடிப்படையிலானது; இரு மதப் பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது என்பதாக கூறி எதிர்க்கப்பட்டு வருகிறது.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications