2020ம் ஆண்டின் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவீட்.. அதை ட்விட்டர் சொன்ன விதம் தான் செம்ம!
டெல்லி: 2020ம் ஆண்டின் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவீட் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வெளியிட்ட பதிவினை கூறியுள்ளது ட்விட்டர் இந்தியா நிறுவனம்.
அதை இந்தி, ஆங்கிலம் மட்டுமில்லாது தமிழிலும் சொன்னது தான் ஹைலைட்டே. இந்தியாவில் பல மொழிகள் உள்ள நிலையில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் ஆங்கிலம் இந்திக்கு அடுத்தபடியாக தமிழிலும் கூறியுள்ளது. அமிதாப் ட்வீட் மட்டுமல்ல வீராட் கோலியின் ட்வீட் மற்றும் விஜய்யின் ட்வீட்யும் தமிழில் கூறியுள்ளது.

2020ம் ஆண்டின் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவீட் பதிவான அமிதாப் பச்சனின் பதிவினை 43 ஆயிரம் பேர் மேற்கொள் காட்டியிருப்பதாக கூறியுள்ளது. அமிதாப்பின் ட்விட்டை மொத்தம் 4.43 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 78 ஆயிரம் பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.

சரி அந்த ட்வீட்டில் அப்படி என்ன தான் அமிதாப் பச்சன் சொல்லியிருந்தார் என்பதை பார்ப்போம். எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என் குடும்பத்தினர். என்னிடம் பணியாற்றுபவர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் கடந்த 10 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அமிதாப் பச்சன் கூறியிருக்கிறார்.













Click it and Unblock the Notifications