Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேஷனல் ஹெரால்டு வழக்கு.. சர்தார் பட்டேலின் பழைய கடிதங்களால்.. வசமாக சிக்கும் காங்கிரஸ்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பல்வேறு அரசியல் நிகழ்வுகளால் மூடிமறைக்கப்பட்டு, புதைக்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு வழக்கு தற்போது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் தேசிய கவனத்திற்கு திரும்பியுள்ளது. ராகுல் காந்தி குடும்பம் இந்த முறை வழக்கில் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளது.

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ₹5,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அமலாக்க இயக்குனரகம் (ED) இந்த வழக்கில் குற்றம் சாட்டி உள்ளது. இது காங்கிரஸின் பாரம்பரிய ஊழல் மற்றும் வம்சத்தின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு சிறந்த உதாரணம் என்று பாரதிய ஜனதா கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

national herald

ஆனால் இந்த ஊழல் முறைகேட்டில் வேர்கள் மிகவும் ஆழமானது. இந்த ஊழலின் உண்மையை கண்டறிய 1950 ஆம் ஆண்டிற்கு செல்ல வேண்டும். இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலே எச்சரிக்கை விடுத்த விவகாரம் ஆகும் இது. மே 1950 இல் சர்தார் பட்டேல் எழுதிய பல கடிதங்கள் இதற்கு உதாரணம் ஆகும். இந்த கடிதங்கள் எல்லாம் சர்தார் படேலின் கடிதம் என்ற புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

நேரு குடும்பம் மீது புகார்

பல்வேறு நிதி திரட்டும் நடவடிக்கைகளுக்கு நேஷனல் ஹெரால்டைப் நேரு குடும்பம் பயன்படுத்தியதாக அப்போதே படேல் குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தார். நிதி பரிவர்த்தனைகளில் அரசாங்கத்தின் செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தி நிதிகளை திரட்டியதாகவும் நேரு குடும்பத்தின் மீது பட்டேல் அப்போது புகார்களை வைத்து இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஜவஹர்லால் நேருவை படேல் வெளிப்படையாக எச்சரித்தார். சந்தேகத்திற்குரிய அல்லது கறைபடிந்த ஆதாரங்களில் இருந்து நிதியைப் பெறுவதைத் தவிர்க்குமாறு அவருக்கு அறிவுறுத்தினார்.

அப்போதே இதை தவிர்க்கும் வகையில் மழுப்பலாக நேரு எழுதிய பதில் கடிதங்கள் பட்டேலின் புகார்களில் உள்ள உண்மைகளை மேலும் வலுவாக்கியது. நிதி முறைகேடு, பரிவர்த்தனை முறைகேடுகளை ஒதுக்கி தள்ளும் வகையில் நேரு அளித்த பதில்கள் இப்போது கடுமையான விமர்சனங்களை, சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் வளர்ந்து வளர்ந்து தற்போது பல கோடி ரூபாய் ஊழலாக உருவெடுத்து உள்ளதாக பாஜகவினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் பிரபல நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர்.

தற்போது செயல்படாத நேஷனல் ஹெரால்டின் சொத்துக்களை சத்தமில்லாமல் கையகப்படுத்த நேரு குடும்பம் முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தனிப்பட்ட செல்வாக்கிற்காக அரசியல் நிதியை, சலுகைகளை வேண்டுமென்றே துஷ்பிரயோகம் செய்ததாகக் அமலாக்கத்துறை இந்த வழக்கில் கூறுகிறது. 2011, 2012-ம் ஆண்டுகளில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் தங்களுக்கு ரூ.68 லட்சம் வரை வருமானம் வந்திருந்ததாக கணக்கு காட்டி இருந்தனர். ஆனால் மறு ஆய்வு செய்ததில் 2011-ம் ஆண்டு ரூ.155.4 கோடியும், 2012-ல் ரூ.155 கோடியும் வருமானம் வந்ததாக கூறப்பட்டது. இப்படி பல முறைகேடுகள் இந்த வழக்கில் வைக்கப்படுகின்றன .

மழுப்பலான கடிதங்கள்

மே 5, 1950 அன்று, இந்திய விமானப்படையின் ஆட்சேபனைகளை மீறி அரசாங்க ஒப்பந்தத்தைப் பெற்றதாகக் ஹிமாலயன் ஏர்வேஸ் நிறுவனத்தின் மீது புகார்கள் வைக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு நெருக்கமான தனிநபர்கள் நேஷனல் ஹெரால்டுக்கு ₹75,000 நன்கொடை அளித்ததாக அப்போதே புகார் வைக்கப்பட்டது. இது நேருவுக்கு பட்டேல் எச்சரிக்கையுடன் கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார். அப்போதுதான் இந்த விவகாரம் தலைதூக்கியது. அதாவது ஒரு நிறுவனத்திற்கு அரசின் ஒப்பந்தத்தை வழங்க.. அந்த நிறுவனத்திடம் இருந்து தங்களின் தனி நிறுவனத்திற்கு நன்கொடை பெற்று ஏமாற்றியதாக புகார் வைக்கப்பட்டது.

national herald

இந்த புகாரில் இருந்து படேல் பின்வாங்கவில்லை. நன்கொடையாளர்களில் ஒருவரான அகானி ஏற்கனவே வங்கி மோசடி குற்றச்சாட்டை எதிர்கொண்டவர் என்பதையும் பட்டேல் சுட்டிக்காட்டினார். முக்கியமாக அப்போதைய மத்திய அமைச்சர் அகமது கித்வாய், லக்னோவில் உள்ள சர்ச்சைக்குரிய தொழிலதிபர்களான ஜே.பி.ஸ்ரீவஸ்தவா போன்றவர்களிடம் இருந்து பத்திரிகைக்காக நிதி பெற்றதையும் பட்டேல் குற்றச்சாட்டாக வைத்தார்.

நேருவின் தெளிவற்ற பதில்கள்

ஆனால் நேரு இதற்கு அளித்த பதில் தெளிவற்றது. அவர் அப்போது ஹெரால்டின் பொது மேலாளராக இருந்த தனது மருமகன் பெரோஸ் காந்தியிடம் இது பற்றி விசாரிக்க சொல்வதாக கூறி அந்த விவகாரத்தை திசைதிருப்பினார். அதாவது எந்த விதமான உறுதியும் அளிக்காமல் புகார்களை திசை திருப்பும் வகையில் நேரு பேசியதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மனம் தளராத படேல் அடுத்த நாளே இன்னொரு கடிதம் எழுதினார். அவரது மே 6 கடிதத்தில், நேருவின் திசைதிருப்பலுக்கு எதிராக பதில் கேள்விகளை எழுப்பி இருந்தார். சில நன்கொடைகளை அளித்த தனியார் நிறுவனங்கள் சந்தேகம் அளிக்கின்றன. அந்த நிறுவனங்கள் இதற்கு முன் நன்கொடை அளித்ததே இல்லை. அவர்களின் செயல்கள் சந்தேகம் தருகின்றன, என்று குற்றச்சாட்டு வைத்தார்.

நேரு மீண்டும் மேம்போக்காக பதிலளித்தார். பத்திரிகையின் நிதிகளில் தனக்கு தொடர்பு இல்லை. நான் மூன்று ஆண்டுகளாக அதில் ஈடுபடவில்லை. மிருதுளா என்ற ஒருவருக்கு பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன். அதில் சில தவறுகள் நடந்திருக்கலாம், ஆனால் நஷ்டம் மற்றும் லாபம் சம்பந்தப்பட்ட வணிக விஷயமாக எனக்கு எதுவும் தெரியாது.. அதில் நான் பொறுப்பேற்க முடியாது என்று மழுப்பலாக பதில் அளித்தார்.

national herald

சுப்பிரமணிய சுவாமியின் குற்றச்சாட்டு

பாஜக மூத்த தலைவரும், வழக்கின் மனுதாரருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, பொதுச் சொத்துகளை அபகரிக்க நேரு குடும்ப மேற்கொண்ட சதி இது என்று குற்றஞ்சாட்டினார். சுப்பிரமணிய சுவாமியின் கூற்றுகள் பாஜகவின் விமர்சனத்துடன் ஒத்துப் போகின்றன.

காங்கிரஸ் குடும்பம் நடத்தும் நிறுவனமாக இது செயல்படுகிறது. அங்கு அரசியல் செல்வாக்கு மூலம் தனியார் லாபத்திற்காக நிதி திரட்டுகின்றனர். இதில் அவர்களுக்கு முறைகேடாக சொத்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் 2011, 2012-ம் ஆண்டுகளில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி இருப்பதாக புகார் உள்ளது. காங்கிரஸ் கட்சியை பயன்படுத்தி ALJ நிறுவனத்துக்கு சொந்தமான ரூ2,000 கோடி சொத்துகளை தங்களது யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் சோனியாவும் ராகுல் காந்தியும் அபகரித்துக் கொண்டனர் என்பது பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியின் புகார்.

சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீதான விசாரணையின் அடிப்படையில் 2013-ம் ஆண்டு சோனியா, ராகுல் காந்திக்கு எதிராக வருமான வரித்துறை விசாரணை நடத்த விசாரணை நீதிமன்றம் அனுமதி அளித்தது. 2015-ம் ஆண்டு விசாரணைகளுக்குப் பின்னர் சோனியா, ராகுல் காந்திக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. ALJ பங்குகளை யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் கைப்பற்றியதில் நிதி மோசடி நடைபெற்றதா? என்று அமலாக்கத்துறையின் விசாரணை செய்வதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+