டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீட் தேர்வுக்கு வயது உச்சவரம்பு இனி இல்லை.. தேசிய மருத்துவ ஆணையம் தகவல்.. சட்டத்தில் சொல்லவில்லையாம்

Google Oneindia Tamil News

டெல்லி : நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு எதுவும் இல்லை எனவும், நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் குறிப்பிடவில்லை என தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளது.

பொது மருத்துவம் பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் National Eligibility Entrance Test - என்ற தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

பங்குனி பவுர்ணமியில் தெப்ப உற்வசவம் - திருப்பதியில் 5 நாட்கள் ஆர்ஜித சேவைகள் ரத்து பங்குனி பவுர்ணமியில் தெப்ப உற்வசவம் - திருப்பதியில் 5 நாட்கள் ஆர்ஜித சேவைகள் ரத்து

2013 மே 5ம் தேதி முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வை, முன்பு மத்திய அரசின் இடைக்கல்வி வாரியம் நடத்தியது. கடந்த 2019ம் ஆண்டு முதல் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

நீட் தேர்வு

நீட் தேர்வு

இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் கேட்கப்படும். ஒட்டு மொத்தமாக 180 வினாக்கள் இடம் பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

நீண்ட காலமாக வாதம்

நீண்ட காலமாக வாதம்

ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும். கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவை நீட் தேர்வு சிதைக்கிறது. வசதி உடையவர்களால் மட்டுமே நீட் தேர்வுக்கு சிறந்த பயிற்சியை பெற்று மருத்துவர் ஆக முடியும். நீட் தேர்வுக்கு அனைத்து மாணவர்களுக்கும் சம பயிற்சி வழங்கப்படுவதில்லை என தமிழகத்தில் நீண்ட காலமாக வாதம் முன்வைக்கப்படுகிறது.

வயது வரம்பு

வயது வரம்பு

தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டும் எழுதலாம் என்றபோதிலும், மாணவர்களின் பொருளாதார நிலைமை அதற்கு இடம் தருமா என்ற கேள்வி எழுந்த நிலையில், வயது வரம்பு குறித்த சர்ச்சையும் எழுந்தது. அதாவது கடந்த முறை நீட் தேர்வு எழுதிய ஆசிரியர் ஒருவர் வயது வரம்பின்றி தேர்வு எழுது தேர்ச்சி பெற்றார். ஆனால் வயது வரம்பு மருத்து படிப்புக்கு உள்ளதால் அவர் மருத்துவ படிப்பில் சேரவில்லை.

தேசிய மருத்துவ ஆணையம் கடிதம்

தேசிய மருத்துவ ஆணையம் கடிதம்

நீட் தேர்வுக்கான வயது வரம்பு குறித்து விவாதங்கள் எழுந்த நிலையில், நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய தேர்வுகள் முகமைக்கு தேசிய மருத்துவ ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் குறிப்பிடாத நிலையில் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

English summary
The National Medical Council has stated that there is no age limit for writing the NEED exam and that the National Medical Commission Act does not specify an age limit for writing the NEED exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X