பொய் சொல்லி பெண்ணுடன் உடலுறவு வைப்பது கிரிமினல் குற்றம்.. புதிய மசோதா சொல்வது என்ன? அதிரடி
டெல்லி: இந்தியாவில் நடைமுறையில் இருந்த 3 குற்றவியல் நடைமுறை சட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமசோதாவில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி பெண்ணுடன் உடலுறவு வைப்பது, உண்மையான அடையாளத்தை மறைத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுவது உள்ளிட்டவை கிரிமினல் குற்றங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஏராளமான சட்டங்கள் உள்னள. இந்த சட்டங்கள் அதாவது இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் என 3 வகைகளாக இருக்கின்றன.

இந்த சட்டங்கள் அடிப்படையில் தான் போலீசார், மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் நீதிமன்றம் விசாரணை நடத்தி தண்டனைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் தான் இந்த 3 சட்டங்களின் பெயர்களை மாற்றவும், சட்டப்பிரிவுகளில் புதிய வரையறைகள், விதிகளை சேர்க்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து மத்திய அரசு 3 சட்ட மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்தது. அதன்படி இந்திய தண்டனை சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா எனவும், இந்திய சாட்சிய சட்டம் பாரதிய சாக்சியா என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக மசோதாக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து தற்போதைய நாடாளுமன்ற குளிர்கால தொடரில் இந்த 3 சட்ட மசோதாக்களிலும் திருத்தம் செய்து மீண்டும் லோக்சபா, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்கள் மீதான விவாதம் நடந்த நிலையில் லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தான் புதிய 3 சட்ட திருத்த மசோதாக்கள் பற்றியும், அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்தும் முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் லவ் ஜிஹாத் போன்ற அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையில் இந்த மசோதாக்களில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக புதிய விதிகள் மற்றும் வரையறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி பொய்யான வாக்குறுதிகள் வழங்கி பெண்ணுடன் உடலுறவு வைப்பது, பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டுவதற்கு உண்மையான அடையாளத்தை மறைப்பது உள்ளிட்டவை கிரிமினல் குற்றங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளன. மேலும் தவறான வாக்குறுதிகளை அளித்து பெண்ணுடன் உடலுறவு வைப்பது, பழகுவது உள்ளிட்டவையும் கிரிமினல் குற்றம் என இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு திருமணம் செய்வதாக கூறி ஆண் தன்னை ஏமாற்றிய பலாத்காரம் செய்ததாக பெண்கள் கூறும் குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்கள் விசாரித்து தீர்ப்பு வழங்கி வந்தன. மேலும் முந்தைய இந்திய தண்டனை சட்டத்தில் இந்த குறிப்பிட்ட விஷயத்தில் பிரத்யேகமான வரையறை என்பது இல்லை. ஆனால் புதிய சட்ட மசோதாவில் அதற்கான பிரத்யேக வரையறை வழங்கப்பட்டு உள்ளது கிரிமினல் குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர கூட்டு பலாத்கார வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அந்த நபர்களுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டு முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கவும் இந்த சட்ட மசோதா வாய்ப்பு வழங்குகிறது. மேலும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் ரீதியான துன்புறுத்தினால் அவர்களுக்கான தண்டனை மரண தண்னை வரை நீட்டிப்பு செய்யவும் இந்த மசோதா என்பது பரிந்துரை செய்கிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications