புலி நடந்து பார்த்திருப்பீங்க.. உறுமி பார்த்திருப்பீங்க.. சிரிச்சு பார்த்திருக்கீங்களா.. இத பாருங்க!

புலி சிரிக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி : கம்பீரமாக உறுமி மட்டுமே நாம் பார்த்துப் பழகிய புலி, சிரித்துக் கொண்டிருப்பது போன்ற அற்புதமான புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

காட்டிற்கு ராஜாவாக சிங்கத்தைக் கொண்டாடினாலும், நமது தேசிய விலங்கு என்னவோ புலிதான். வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்த விலங்காகக் கருதப்படும் புலி, தன் புத்தியை உபயோகித்து தனக்கான உணவை தேடிக்கொள்ளும் சாமர்த்தியமான விலங்கு. புலி என்றாலே அதன் கம்பீரமான நடையும், உறுமலும் தான் நமது ஞாபகத்திற்கு வரும்.

புலி உருமினால் 3 கி.மீ தூரத்திற்கு அதன் உருமல் சத்தம் கேட்கும் எனக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட புலியை வனவிலங்கு சரணாலயத்தில் பார்க்கும் போதுகூட, நமக்குப் பயமாகத்தான் இருக்கும். நடந்தாலும் சரி, படுத்து ஓய்வு எடுத்தாலும் சரி புலியின் கம்பீரம் நம்மை பயமுறுத்தவே செய்யும்.

அற்புதமான புகைப்படம்

அற்புதமான புகைப்படம்

இப்படி மிரட்டலான விலங்கான புலி, சிரிக்கக்கூட (அதாகப்பட்டது சிரிப்பது போன்ற முகப்பாவத்தில்..) செய்யும் என்றால் நம்ப முடிகிறதா? அப்படியான அற்புதமான தருணமொன்றை அழகாக தனது கேமராவில் பதிவு செய்திருக்கிறார் புகைப்படக் கலைஞர் ஒருவர். இந்த புலி சிரிக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

டிவிட்டர் பதிவு

டிவிட்டர் பதிவு

இந்தப் புகைப்படத்தை டிவிட்டரில் மோனா பட்டேல் என்பவர் பகிர்ந்துள்ளார். புலி சிரிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, கூடவே "புலிகள் பிறக்கும் போது பற்கள் இல்லாமல் தான் பிறக்கும். சில வாரங்களில் பால் பற்கள் முளைக்க துவங்கும். பின்னர் மனிதர்கள் போல அந்த பல் விழுந்து, வேறு பல் முளைக்கும்.

இதையும் தெரிஞ்சுக்கோங்க...

இதையும் தெரிஞ்சுக்கோங்க...

புலிகளின் பற்களுக்கு இடையே நீண்ட இடைவெளி இருக்கும் அப்பொழுது தான் அதனால் தனது இரையை வலுவாக பிடிக்க முடியும்." என புலியின் பல்லை வைத்து ஒரு பாடமே நடத்தியுள்ளார். புகைப்படத்தைப் போலவே அவரது இந்த உபயோகமான தகவல்களையும் நெட்டிசன்கள் ரசித்து பாராட்டியுள்ளனர்.

 அரிதான புகைப்படங்கள்

அரிதான புகைப்படங்கள்

சம்பந்தப்பட்ட அந்தப் புகைப்படம் யார் எடுத்தது எனத் தெரியவில்லை. நம்மூரில் நாய் இப்படி பல்லைக் காட்டும் போது, அது சிரிப்பதாக புகைப்படம் எடுத்து பகிர்வது வழக்கம். அதுபோலவே வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள், அபாயகரமான விலங்குகள் இப்படி விதவிதமாகக் கொடுக்கும் அரிதானப் போஸ்களை அழகாகப் பதிவு செய்து விடுகின்றனர்.

போட்டோவிற்கு போஸ்

போட்டோவிற்கு போஸ்

தற்போது வைரலாகி வரும் இந்தப் புகைப்படங்களைப் பார்த்து, 'வாவ்.. என்ன ராஜ சிரிப்பைய்யா உமது..' என்ற ரேஞ்சுக்கு கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். வழக்கம்போல், சில குசும்பான நெட்டிசன்கள், 'போட்டோகிராபர் புகைப்படம் எடுப்பதைத் தெரிந்து கொண்டு புலி சிரித்துக் கொண்டே போஸ் தருகிறது' எனக் கலாய்த்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+