Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவிபேட் வழக்கு: அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது.. தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவிபேட் வழக்கில் மிஷின் புரோகிராம் தொடர்பாக சில சந்தேகங்கள் இருப்பதாக நீதிபதிகள் கூறிய நிலையில், தேர்தல் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது மெஷினில் புரோகிராம்களை மாற்ற முடியாது என்று தேர்தல் அதிகாரிகள் கூறினர். தொடர்ந்து இந்த வழக்கின் தீர்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குச்சீட்டு முறையுடன் ஒப்பிடும் போது இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வப்போது குற்றசாட்டுக்கள் எழுகின்றன. எனினும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவிகிதம் பாதுகாப்பானது.. அதில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என்று தேர்தல் ஆணையம் உறுதி பட தெரிவித்து வருகிறது.

The Supreme Court is likely to pass interim directions on pleas seeking VVPAT verification today

வாக்குப்பதிவின்போது, வாக்காளர் அளித்த ஓட்டு, உரிய சின்னத்தில் பதிவாகி இருக்கிறதா என்பதை அறிய ஒப்புகை சீட்டுகள் வெளிவருகின்றன. ஆனால், வாக்கு எண்ணிக்கையின்போது ஒப்புகை சீட்டுகள் முழுமையாக எண்ணப்படாமல், ஏதேனும் சில இயந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன.

இதற்கிடையே, ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் சரிபார்க்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் 3 அமைப்புகள் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்குகள், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

உச்ச நீதிமன்றமும் அப்போது பல முக்கிய கருத்துகளை தெரிவித்தன. குறிப்பாக தேர்தல் நடைமுறையில் புனிதம் இருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் விரிவாக விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. மேலும், தேர்தலில் தவறு எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதியாக அனைவரும் நம்பும் நிலை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

அப்போது நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம் அளித்தார். அதில், வாக்குப்பதிவு இயந்திரத்தை தயாரிக்கும் நிறுவனத்துக்கு எந்த பொத்தான், எந்த சின்னத்துக்கு பொருத்தப்படும் என்று தெரியாது. எந்த இயந்திரம், எந்த மாநிலத்துக்கு அனுப்பப்படும் என்றும் தெரியாது. எனவே, வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்வது பற்றிய பேச்சுக்கே இடமில்லை" என்று கூறினார்.

அப்போது , வாக்களித்த பிறகு வாக்காளர்கள் ஒப்புகை சீட்டைப் பெற முடியுமா என்று கூட நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இருப்பினும், அது வாக்காளர்களின் ரகசியத்தை சமரசம் செய்யும் என்றும் அந்த ஒப்புகை சீட்டுகளை வாக்குச்சாவடிக்கு வெளியே தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையம் பதிலளித்தது. மீண்டும் வாக்குச்சீட்டு நடைமுறைக்கு திரும்புவது பிற்போக்குத்தனமானது என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

இரு தரப்பிலும் பல முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தனர். இதற்கிடையே விவிபேட் இயந்திரங்களில் வரும் ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், விவிபேட் இயந்திர மைக்ரோ கன்ட்ரோலர் தொடர்பாக சில சந்தேகங்கள் உள்ளது என்று கூறினர். மைக்ரோ கன்ட்ரோலர் ஒரு முறை மட்டும் ஃபுரோகிராம் செய்யப்பட்ட கூடியதா என்று கேள்வி எழுப்பினர். மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரம் அல்லது விவிபேட் இயந்திரத்தில் மைக்ரோ கண்ட்ரோலர் இருக்கிறதா? என்றும், வாக்குப்பதிவுக்கு பிறகு கட்டுப்படுத்தும் அலகுக்கு சீலிடப்படுமா? என்றும் விவிபேட் இயந்திரங்கள் தனியாக வைக்கப்படுமா என கேள்வி எழுப்பினர்.

தரவுகள் 40 நாட்கள் சேமிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 45 நாட்கள் என கூறப்பட்டுள்ளது. தேர்தல் தொழில்நுட்ப அதிகாரிகள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். மைக்ரோ கன்ட்ரோலர் ஒரு முறை மட்டும் ஃபுரோகிராம் செய்யப்பட்ட கூடியதா என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கூறி வழக்கை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து இன்று மதியம் 2 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. ஈவிஎம், விவிபேட், கட்டுப்பாட்டு கருவி மூன்றுக்கும் தனித்தனி மைக்ரோ சிப் இருக்கிறது.

மூன்றிற்கும் தனித்தனியே மைக்ரோ சிப், புரோகிராம் செய்யப்பட்டு பொருத்தப்படும். தேர்தல் முடிந்த பிறகு மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்களை மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம், பாரத் எலக்ட்ரானிசுக்கு மட்டுமே உரிமை உள்ளது" என்று கூறினர். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பினர், ஈவிஎம் உற்பத்தி செய்யும் நிறுவனம் சிப்புகளை மீண்டும் பயன்படுத்தலாம் என கூறுகிறது என்று தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆணையம் கூறும் தகவல்களை ஏற்கத்தான் வேண்டும் என்று கூறினர். தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைத்துள்ளது என்று கூறி தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+