Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்.. இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது செபியின் அறிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக 'செபி' (SEBI) ஆய்வறிக்கையை தாக்கல் செய்திருந்த நிலையில் இதன் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' சில மாதங்களுக்கு முன்னர் அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. 413 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததாக குற்றம்சாட்டியிருந்தது. "இந்த காலகட்டத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் அபரிமிதமாக வளர்ந்தது. பங்கு மதிப்புகளை அதிகரிக்க போலி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளன" என்று ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

The Supreme Court will hear SEBIs fresh position report on the Adani-Hindenburg case today

இந்த அறிக்கை வெளிவரும் போது அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ.9.84 லட்சம் கோடியாக இருந்தது. இதில் ரூ.8.2 லட்சம் கோடி, அதாவது மொத்த சொத்தில் முக்கால்வாசி சொத்துக்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் ஈட்டப்பட்டிருக்கிறது. அதுபோல இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 819% வளர்ச்சியடைந்திருக்கிறது. இதற்கு காரணம் மொரிசியஸ், கரீபின் தீவு உள்ளிட்ட வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்புள்ள நாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்க போலியான போட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த விஷயங்களைதான் ஹிண்டன்பர்க் விரிவாக பொதுவெளியில் வைத்தது. இதன் காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் சரிய தொடங்கி தற்போது பெரும் நஷ்டத்தில் இருக்கிறார் அதானி. இதில் அதானிக்கு மட்டும் இழப்பீடு ஏற்படவில்லை, அதானி நிறுவனத்தை நம்பி ஏராளமான சிறு குறு நிறுவனங்கள் இயங்கி வந்தன. இந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வந்திருந்தன. தற்போது அதானியே காலி எனில், இந்த நிறுவனங்களும் துடைத்தெறியப்பட்டன. இதில் வேலைப்பார்த்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

அதேபோல அதானி நிறுவனத்தில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகளும் முதலீடு செய்யப்பட்டன. தற்போது அதானி நஷ்டமடைந்துள்ளது எனில் இந்த பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளின் நிலை என்ன? என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மெற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் பங்குசந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி (SEBI) செய்த மாற்றங்கள் காரணமாக நிபுணர் குழுவின் விசாரணை திறன் கட்டுப்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே உச்சநீதிமன்றத்தில் கடந்த மே மாதம் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து செபி இது குறித்து விசாரணையில் இறங்கியது. தனது விசாரணை குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி உச்சநீதிமன்றத்தில் செபி அறிக்கை தாக்கல் செய்தது. அதில், "24 அம்சங்கள் குறித்த விசாரணையில் 22 விசாரணைகள் நிறைவடைந்துவிட்டன. மீதமுள்ள இரண்டு குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளோம்" என்று கூறியிருந்தது. இந்நிலையில் இந்த விசாரணை அறிக்கை மீதான விரிவான விசாரணை இன்று நடைபெறுகிறது. முன்னதாக கடந்த 13ம் தேதி இது விசாரிக்கப்படும் என்று இருந்த நிலையில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு அக்.20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதேபோல கடந்த 13ம் தேதியன்று அதானியின் பங்குகள் சரிவை சந்தித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+