விபத்தாக மலர்ந்த காதல்! 2 கொலை! கேரளா பாய்சன் கொலைக்கும்.. டெல்லி மர்டருக்கும் உள்ள.. அந்த கனெக்சன்
டெல்லி: கேரளாவில் நடந்த "பாய்சன்" கொலைக்கும், டெல்லியில் நடந்த "பிரிட்ஜ்" கொலைக்கும் இடையில் நெருங்கிய சில தொடர்புகள் இருக்கின்றன.
"முன்பெல்லாம் காதல் திருமணம் செய்தால் பெற்றோர்கள்தான் கொலை செய்வார்கள்.. இப்போது அதெல்லாம் தேவையே இல்லை.. காதலர்களே தங்களுக்குள் கொலை செய்து கொள்வார்கள்".. இதுதான் டெல்லி, கேரளா கொலைகளை தொடர்ந்து நெட்டிசன்கள் போட்டு வரும் கமெண்ட்.
அடுத்தடுத்து செய்திகளில் வெளியான இரண்டு கொலைகளை பற்றிய செய்திகள் சமூக வலைத்தளத்தை உலுக்கி உள்ளது. கேரளாவில் கிரீஷ்மா காதலனை கொலை செய்த போது சூப் பாய்ஸ் பலரும்.. பாருங்க எல்லா பொண்ணுங்களும் இப்படித்தான் என்று கமெண்ட் செய்து வந்தனர்.
இப்போது டெல்லி கொலைக்கு பின்பாக "yes all men" என்று பெண்களும் பதிலுக்கு ஆண்களை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். இந்தியாவை உலுக்கி உள்ள இந்த இரண்டு கொலைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது.

2 காதல்
கேரளாவில் கிரீஷ்மா - ஷாரோன் இருவருமே காதலித்து வந்துள்ளனர். மிகவும் நெருக்கமாக பழகி உள்ளனர். பல இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அடிக்கடி ஒன்றாக ரூம் எடுத்து தங்கி உள்ளனர். இவர்களுடன் நெருக்கமான இருந்த நண்பர்கள் பலர் இவர்களை மாடல் கப்புள் என்று அழைக்கும் அளவிற்கு இவர்கள் நட்பாகவும் அன்பாகவும் இருந்துள்ளனர்.

டெல்லி காதல்
அதேபோல்தான் மும்பையில் அப்தாப் அமீன் - சாரதா தம்பதிகளும். இரண்டு பேருமே நல்ல வேலையில் இருந்துள்ளனர். ஒன்றாக சுற்றுவது, மாடர்ன் "இன்ஸ்ட்டா" வாழ்க்கை வாழ்வது, லிவ் லின் என்று அன்பாக இருந்துள்ளனர். லிவ் காதலுக்காக தனது பெற்றோரையே துறக்கும் அளவிற்கு சாரதா தீவிரமாக காதலித்து உள்ளார். மும்பையில் இருந்த வேலையை இருவரும் விட்டுவிட்டு டெல்லிக்கு சென்று வேலையில் சேர்ந்து ஒன்றாக வாழும் அளவிற்கு சீரியசாக இருந்துள்ளார்.

விபத்து
இரண்டு பேருடைய காதலும் விபத்தாகவே நடந்து இருக்கிறது. கேரளாவில் கிரீஷ்மா - ஷாரோன் இருவருமே வேறு வேறு கல்லூரியை சேர்ந்தவர்கள். இருவரும் பேருந்தில்தான் பார்த்து உள்ளனர். இருவரையும் சேர்த்து வைக்க நண்பர்கள் எல்லாம் இல்லை. பேருந்தில் தினமும் பார்த்து சிரித்து பேசி பின்னர் காதலர்கள் ஆகி உள்ளனர். இன்னொரு பக்கம் டெல்லி கொலையிலும், மும்பையில் அப்தாப் அமீன் மற்றும் சாரதா இருக்கும் போது டேட்டிங் ஆப் மூலம் பழகி உள்ளனர். இருவருக்கும் முன்பின் தெரியாது. பேசி, பழகி பின்னர் காதலில் விழுந்துள்ளார்.

கனெக்சன்
இரண்டு கொலையும் ஒரே காரணத்திற்காகவே நடந்து உள்ளது. இரண்டு கொலையிலும் ஒருவர் திருமணத்திற்கு முயன்று இருக்கிறார். இன்னொருவர் கொலை செய்துள்ளார். கேரளா கொலையில் ஷாரோன் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கிரீஷ்மாவை தொல்லை செய்துள்ளார். ஆனால் வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடிவ எடுத்த கிரீஷ்மா ஷாரோனை பெயருக்கு கல்யாணம் செய்துவிட்டு பின்னர் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.

டெல்லி கொலை காரணம்
டெல்லி கொலையில் சாரதா திருமனம் செய்து கொள்ளலாம் என்று கூறி உள்ளார். ஆனால் அப்தாப் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அப்தாப் "fling" உறவில் இருக்க முயன்று உள்ளார். ஆனால் திருமணம் செய்ய வேண்டும் என்று சாரதா நச்சரித்து வந்த நிலையில்தான் அப்தாப் அவரை கொலை செய்துள்ளார். இதெல்லாம் போக இந்த இரண்டு கொலைகளுக்கும் வேறு ஒரு தொடர்பு இருந்துள்ளது.

இரண்டாவது தொடர்பு
இரண்டு கொலையையும் இவர்கள் இன்டர்நெட் பார்த்து செய்துள்ளனர். ஒருவர் கொலை செய்துவிட்டு உடலை மறைப்பது பி[பற்றி இன்டர்நெட்டில் படித்து உள்ளார். அது டெல்லி கொலை. கேரளா கொலையில், கொலை செய்வது எப்படி, மெதுவாக கொலை செய்வது எப்படி என்று இன்டர்நெட்டில் பார்த்து இருக்கிறார் கிரீஷ்மா. ஆண் பெண் என்ற வேறுபாடு இன்றி.. கொலை செய்யும் அளவிற்கு இந்த கால "ரிலேஷன்ஷிப்" சிக்கல்கள் தலை தூக்கி இருப்பது கவலைப்பட வேண்டியது. அதோடு உளவியல் ரீதியாக அணுகப்பட வேண்டியது!
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications