சைஸா கம்பி நீட்ட பார்த்தாரு.. மனைவிக்கு பார்சல் வேற.. பிரித்து பார்த்தால்.. அடகடவுளே.. தூக்கிய போலீஸ்
இளம்பெண் சமீருக்கு எவ்வளவோ சொல்லி புரிய வைக்க முயன்றும் சமீர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருக்கிறார்.
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் பாலியல் பலாத்கார குற்றத்திலிருந்து எஸ்கேப் ஆக திட்டமிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குருகிராம் பகுதியில் உள்ள புஞ்சானாவில் வசித்து வருபவர் இளைஞர் சமீர் அகமது. இவர் இதே பகுதியில் வசித்து வந்த இளம்பெண்ணிடம் பழகி வந்துள்ளார். இருவரும் முதலில் நட்பாக பழகிய நிலையில், சமீர் அப்பெண்ணிடம் தான் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதனை இளம்பெண் நம்பவில்லை. இப்படி இருக்கையில் திடீரென சமீர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
இது குறித்து இளம்பெண் புகார் அளிக்க முற்படுகையில் சமீர் அப்பெண்ணை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார். ஆனால் இளம்பெண் தன்னுடைய வாக்குறுதியை ஏற்காத நிலையில், வேறு வழியின்றி சமீர் இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்துவிட்டு பலமுறை இளம்பெண்ணுடன் உடலுறவு வைத்துவிட்டு பின்னர் அங்கிருந்து வெளியூர் வந்திருக்கிறார்.

பார்சல்
இப்படி வெளியூர் வந்த சமீர் கடந்த சில மாதங்களாக மனைவியிடம் திரும்பாத நிலையில், ஒரு பார்சலை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மனைவிக்கு போன் செய்து, "முத்தலாக் கூறி உன்னை விகாரத்து செய்தவிட்டேன். உன்னுடைய உடைமைகள் இந்த பார்சலில் வந்திருக்கிறது, அதனை பெற்றுக்கொள்" என்று கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் சமீரிடம் எவ்வளவோ சொல்லி புரிய வைக்க முயன்றிருக்கிறார். ஆனால், சமீர் இவருடன் பேச தயாராக இருக்கவில்லை. இதனையடுத்து இளம்பெண் தைரியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.

விசாரணை
இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, "முதல் பலாத்கார சம்பவம் கடந்த 2020ம் ஆண்டு நடந்திருக்கிறது. சம்பவத்தையடுத்து இளம்பெண் காவல் நிலையத்தை அணுக முயன்றிருக்கிறார். ஆனால் சமீரும் அவரது உறவினரும் சேர்ந்து இப்பெண்ணை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கின்றனர். அதே ஆண்டு மே மாதம் இரு குடும்பங்களின் முன்னிலையில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் திருமணத்திற்கு பின்னர் இப்பெண்ணை சமீர் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை. மாறாக தனியாக வாடைகைக்கு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார்.

வாடகை வீடு
2021ம் ஆண்டு முதல் சமீர் இந்த வாடகை வீட்டிலும் இருக்காமல் வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அதன் பின்னர் பல மாதங்கள் ஆன பின்னரும் வீடு திரும்பவில்லை. என்றாவது ஒருநாள் கணவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்த மனைவிக்கு அவரிடமிருந்து விவாகரத்துதான் கிடைத்திருக்கிறது. இதை எதிர்பார்க்காத இளம்பெண் பலமுறை சமீரை நேரில் சந்திக்க முயன்றுள்ளார். ஆனால் சமீர் இவருக்கு பிடி கொடுக்காமல் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டிருக்கிறோம்.

கைது
விசாரணையின் அடிப்படையில் சமீரை கைது செய்திருக்கிறோம். இந்த விவாகரத்தில் சமீருக்கு உதவியாக இருந்த ஆட்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள்" என்று காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இளைஞர் ஒருவர் பலாத்கார வழக்கிற்கு பயந்து இளம்பெண்ணை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications