தேங்காய்பட்டினத்தில் மாற்றம் வருமா? மீனவரின் இறப்பு சான்றிதழை 3 மாதத்தில் தர வேண்டும்: விஜய் வசந்த்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடலில் மீனவர்கள் காணாமல் போனால், அடுத்த 3 மாதங்களில் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று எம்பி விஜய்வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் மீன்வள பட்ஜெட் மானியங்கள் குறித்த கூட்டத் தொடர் நடந்தது... இதில் விஜய் வசந்த் எம்.பி. பேசும்போது, கன்னியாகுமரி தொகுதியின் நிலைமை குறித்து விரிவாக பேசினார். முக்கியமாக மீனவர்கள் பிரச்சனையை கையில் எடுத்து, பேசியது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.

Death Certificate Kanniyakumari Vijay Vasanth

பேசியதாவது: "குமரி மாவட்ட கடற்கரையில் கடல் அரிப்புகள் அடிக்கடி ஏற்பட்டு, மீனவர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பெரும் அச்சத்தை தந்துவிடுகிறது.. இதற்கு நிரந்தர தீர்வு காண கடற்கரை முழுவதும் தடுப்பு சுவர்கள் மற்றும் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும். இதற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.

இன்னல்கள்: மீன்பிடிக்க சென்று கடலில் காணாமல் போகும் மீனவர்களுக்கான இறப்பு சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு பிறகு தான் வழங்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் அந்த குடும்பம் பல இன்னல்களை சந்திக்கிறது. எனவே இதுபோன்ற சூழலில் உயர்மட்ட குழு அமைத்து 3 மாதத்திற்குள் இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மீனவர் கடலில் இறந்தால் அவர்களது குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தின் அளவை உயர்த்த வேண்டும். குமரி மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் சாலை உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க நிதி ஒதுக்க வேண்டும்.

வாணியகுடி: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் பணிகளை விரைவில் முடிக்கவும், குளச்சல் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யவும், வாணியகுடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மீனவ கிராமங்களிலும் மீன் பதனிடும் நிலையங்கள் நிறுவ வேண்டும். தேங்காப்பட்டணம்-இரயுமன்துறை இடையே மேம்பாலம் அமைத்து, ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை கடற்கரை சாலைகளை சீரமைக்க வேண்டும்.

வெளிநாட்டு சிறைகளில் வாடும் இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க கடல்சார் பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு உயர்மட்ட குழு அமைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+