கொரோனா வேக்சின் பணிகளில்.. இந்த 3 பிரிவினருக்கு மட்டும் முன்னுரிமை.. இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்
டெல்லி: நாடு முழுவதும் 12 வார இடைவெளியில் கோவிஷீல்டு வேக்சின் வழங்கப்பட்டு வரும் நிலையில், 3 பிரிவினருக்கு 28 நாட்கள் கால இடைவெளியில் வேக்சின் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை குறைந்துள்ள நிலையில், வேக்சின் பணிகளை மத்திய அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது. நாட்டில் 18+ அனைவருக்கும் வேக்சின் போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நாட்டில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய வேக்சின்களே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தடுப்பூசி இடைவெளி
கோவாக்சின் 4 முதல் 6 வாரக் கால இடைவெளியில் செலுத்தப்படுகிறது. அதேநேரம் முதலில் 4 முதல் 6 வாரங்களாக இருந்த கோவிஷீல்டு டோஸ் இடைவெளி தற்போது 12 முதல் 16 வாரங்களாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இரு டோஸ்களுக்கும் இடையேயான காலம் அதிகமாக உள்ளதால் பலரும் இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கோவிஷீல்டு
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தடுப்பூசியாக கோவிஷீல்டு உள்ளது. இதனால் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் கோவிஷீல்டு வேக்சினையே எடுத்துக் கொள்கின்றனர். இருப்பினும், கால இடைவெளி அதிகமாக உள்ளதால், வெளிநாடுகளில் எங்கள் தங்கள் விசா நிராகரிக்கப்படுமோ எனப் பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

3 பிரிவினர்
இந்நிலையில், குறிப்பிட்ட 3 பிரிவினருக்கு மட்டும் 28 நாட்கள் இடைவெளியில் கோவிஷீல்டு டோஸ்களை வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள், வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லவுள்ளவர்கள், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு வேக்சின் கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

என்ன ஆவணம் தேவை
இந்த மூன்று பிரிவினரும் வெளிநாட்டிற்குச் செல்வதில் தேவையான ஆவணங்களை சமர்திப்பு 28 நாட்களில் கோவிஷீல்டு எடுத்துக் கொள்ளலாம். மேலும், பாஸ்போர்ட்டையும் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியவர்கள் இந்த முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதன் பிறகு அப்போது இருக்கும் நிலையைப் பொருத்து முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வேக்சின்கள்
இந்தியாவில் பயன்படுத்தப்படும் வேக்சின்களில் பாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்கு சுமார் 10 நாடுகளில் மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி வேக்சின் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா இன்னும் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆகஸ்போர்ட் ஆய்வாளர்கள் உருவாக்கிய கோவிஷீல்டு மட்டுமே 60க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications